பாடகர் கிரிஷை விவாகரத்து செய்கிறாரா சங்கீதா? உண்மையை போட்டுடைத்த நடிகை
விவாகரத்து பற்றிய சர்ச்சைகளுக்கு நடிகை சங்கீதா கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் சங்கீதா. இவர் மாடலிங் மூலம் தான் மீடியாக்குள் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல விளம்பர படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது.
இவர் முதன் முதலாக 1998 ஆம் ஆண்டு நடிகர் நெப்போலியன் நடித்த பகவத்சிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் மலையாள படத்தில் நடித்து இருந்தார்.
அதற்குப் பின் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையை தொடங்கியவுடன் இவர் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
சங்கீதா குறித்த தகவல்:
மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் தொகுப்பாளர், டான்ஸரும் ஆவார். இவர் முறையாக பரதநாட்டிய கலையை பயின்றவர். இவர் சினிமாவை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இவர் பெரும்பாலும் நடன நிகழ்ச்சிகளில் தான் பங்கேற்றிருக்கிறார். அந்த வகையில் சங்கீதா அவர்கள் ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ், சூப்பர் ஜோடி போன்ற பல நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார்.
சங்கீதா திருமணம்:
தற்போது இவர் பரதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க பெண்களை மையமாக கொண்ட கதை. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இந்த மாதம் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்தும் இவர் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சங்கீதா அவர்கள் பிரபல பாடகர் கிரிஷை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.
விவாகரத்து சர்ச்சை:
இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் சங்கீதா விவாகரத்து செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. காரணம், சில தினங்களுக்கு முன்பு சங்கீதா சோசியல் மீடியாவில் சங்கீதா கிரிஷ் என்று இருந்த தன் பெயரை சங்கீதா act என்று மாற்றி இருக்கிறார். இதை பார்த்து பலருமே சங்கீதா-கிரிஷ் இருவருமே பிரிய இருக்கிறார்கள். இருவருக்கும் இடையே பிரச்சனை. கூடிய சீக்கிரத்தில் விவாகரத்து வாங்குவார்கள் என்றெல்லாம் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். சமீபத்தில் நடந்த 90களின் நட்சத்திரங்கள் விழாவில் கூட சங்கீதா மட்டும் தான் இருந்தார்.
https://www.youtube.com/watch?v=bwJ9GCBO4nI
சங்கீதா விளக்கம்:
இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் நடிகை சங்கீதா, இந்த வதந்திகள் எல்லாம் உண்மை கிடையாது. ஆரம்பத்திலிருந்து என்னுடைய இன்ஸ்டாவில் என்னுடைய பெயர் சங்கீதா act என்று தான் இருந்தது. இதை வைத்து நான் விவாகரத்து வாங்குகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.