தமிழ் சினிமாவை விட தெலுங்கு தான் பிடிக்கும், ஏனென்றால்- நடிகை சங்கீதாவின் கோபத்திற்கு காரணம் இதுதான்
பிரபல நடிகை சங்கீதா தனக்கு தமிழை விட, தெலுங்கு சினிமா தான் பிடிக்கும் என்று பேட்டியில் கூறியிருக்கும் விஷயம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சங்கீதா 1998 ஆம் ஆண்டு நடிகர் நெப்போலியன் நடித்த 'பகவத்சிங்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பாகவே ஒரு சில மலையாள படங்களில் இவர் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இவர் பல படங்களில் நடித்தாலும், பாலா இயக்கிய 'பிதாமகன்' படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
மேலும் இவர் பிரபல பாடகர் கிருஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2006 ஆம் ஆண்டு 'வேட்டையாடு விளையாடு' படத்தில் மூலம் இவரை பாடகராக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் அறிமுகம் செய்தார். கடைசியாக தமிழில் நடிகை சங்கீதா விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'தமிழரசன்' போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
சங்கீதா பேட்டி:
அதில் அவர், நான் தெலுங்கு, மலையாளம், கன்னடா, தமிழ் என பல மொழிகளில் நடித்திருக்கிறேன். ஆனால், எனக்கு தெலுங்கு மொழியில் நடிக்க தான் பிடிக்கும். எனக்கு தமிழில் நடிக்க பிடிக்காது. இப்போ நான் தெலுங்குல தான் படம் பண்ணிட்டு இருக்கேன். இதைப் பார்த்து எத்தனை பேர் கோபம் பட்டாலும் பரவாயில்லை. அதுக்கு முக்கியமான காரணம் மரியாதை. தெலுங்கு சினிமாவில் கொடுக்கிற மரியாதை தமிழில் கொடுக்க மாட்டாங்க.
https://www.youtube.com/watch?v=PhYGBY_VVMc
தமிழில் மரியாதை இல்லை:
மேலும், தமிழ் சினிமாவில் இருக்கவங்களுக்கு எதற்கு அந்த மாதிரி ஒரு மனப்பான்மை இருக்கு என்று எனக்கு தெரியவில்லை. இப்போ எல்லாம் நான் தமிழ் மொழியில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன். ஏனென்றால், தமிழ் சினிமாவை விட எனக்கு தெலுங்கு சினிமாவில் நல்ல மரியாதை, சம்பளம், வாய்ப்புகள் கிடைக்கிறது. தமிழ் சினிமாவில் எனக்கு வாய்ப்பு கேட்டு தொலைபேசியில் பேசும்போதே மரியாதை குறைவு தான் பேசுவாங்க.
சம்பளத்தை ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க:
அவங்க எனக்கு வாழ்க்கையை கொடுக்கிற மாதிரி பேசுவாங்க. நான் என்னமோ எங்க வீட்டு கரண்ட் பில் கட்ட கூட காசு இல்லாம கஷ்டப்படுற மாதிரி அவங்க என்கிட்ட பேசுவாங்க. நாங்க உங்களுக்கு சம்பளம் இவ்வளவு என்று ஃபிக்ஸ் பண்ணி வச்சிருக்கோம். நீங்க வந்து நடிச்சு கொடுத்துட்டு போயிடுங்கன்னு சொல்லுவாங்க. அப்போ நான் அவங்க கிட்ட, நான் ஒன்னும் உங்ககிட்ட கால் பண்ணி வாய்ப்பு கேட்கலையே. எனக்கு எவ்வளவு மதிப்பு இருக்கு என்று நான் தான் சொல்ல வேண்டும் என்று சொல்வேன்.
30 வருஷமா இருக்கேன்:
அதற்கு அவங்க இல்லம்மா இந்த சம்பளம் கரெக்ட்டா இருக்கும் அப்படின்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி பேசினா எனக்கு பிடிக்காது. ஒருத்தருக்கு உண்டான மரியாதையை அவங்க கொடுக்கணும். இவ்வளவு வருஷமா, நான் பெருசா சாதிச்சிட்டேன் என்று எல்லாம் எதுவுமே சொல்லல. இந்த 30 வருஷமா சினிமாவில் இருக்கிறதே எனக்கு பெரிய சாதனைதான். ஆனால், எனக்கு அவர்கள் மரியாதை கொடுப்பதில்லை. அதனால்தான் நான் தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கிறது இல்லை என்று வருத்தப்பட்டு கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.