அந்த படம் நடிக்கும் போது என் வயசு, ராஜ்கிரணால தினமும் அழுதுகிட்டே சாப்பிட்டேன் - பூவே உனக்காக நாயகி சங்கீதாவா இது

By subhashini · 16/10/2023

ராஜ்கிரண் சாரால் நான் சூட்டிங் ஸ்பாட்டில் தினமும் அழுது கொண்டு இருப்பேன் என்று நடிகை சங்கீதா சொன்ன தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் நடித்த பல நடிகர்கள் இன்று முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு ஜோடியாக நடித்த பல நடிகைகள் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டனர். அந்த வரிசையில் விஜய்யின் பூவே உனக்காக படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சங்கீதாவும் ஒருவர்.

இவருடைய தந்தை பூர்வீகம் கேரளம் தான். அவருடைய பிஸ்னசுக்காக சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டார். 1978லேயே சிநேகிதம் ஒரு பெண்ணோ என்ற ஒரு மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சங்கீதா. பின் இரத்தத்தின் இரத்தமே என்ற ஒரு தமிழ் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் முதன் முதலாக ஹீரோயினாக ‘எல்லாமே என் ராசா தான்’ என்ற படத்தில் கதாநாயகியாக சங்கீதா மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

சங்கீதா திரைப்பயணம்:

இந்த படத்தில் ஹீரோவாக ராஜ் கிரண் தான் நடித்தார். ஆனால், சங்கீதாவுக்கு என்று ஒரு நல்ல பெயரை கொடுத்தது விஜயின் பூவே உனக்காக படம் தான். அதேபோல் பூவே உனக்காக திரைப்படம் விஜய்க்கு மாபெரும் ஒரு திருப்பு முனை படமாக அமைந்தது. மேலும் சங்கீதா தனது சுட்டித்தனமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்துவிட்டார். அதன் பின்னர் பல படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தது. அதன் பிறகு சங்கீதா ஒரு ரவுண்டு வந்தார்.

சங்கீதா குடும்பம்:

இவர் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்தார். கடையசியாக 2003ல் மேரி ஆல்பர்ட் என்கிற படத்தில் நடித்துவிட்டு ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை சங்கீதா திருமணம் செய்துகொண்டார். இவர் பூவே உனக்காக படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சங்கீதா விலகிவிட்டார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் ஒரு மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.

நடிகை சங்கீதா பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் நடிகை சங்கீதா பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர் ராஜ்கிரண் குறித்து சொன்னது, எல்லாமே என் ராசாதான் படத்தின் மூலம் தான் நான் கதாநாயகியாக மக்கள் மத்தியில் பிரபலமானேன். இந்த படத்தில் நான் நடிக்கும்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் ரொம்ப சின்ன பொண்ணாக இருந்தேன். அதனால் என்னுடைய உடல் எடையை கூட்டி நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு டயட் இருக்க வைத்து எனது உடல் எடையை அதிகரிக்க செய்தார்கள்.

https://www.youtube.com/watch?v=pwDaZ_HlU70

ராஜ்கிரண் அழ வைத்த காரணம்:

ஷூட்டிங்கிற்கு ராஜ்கிரன் சார் அலுவலகத்தில் இருந்து சாப்பாடு வந்துவிடும். என்னை சாப்பிட சொல்லி வற்புறுத்துவார். முட்டை, ஐஸ்கிரீம், மலை வாழைப்பழம் என்று எல்லாம் சாப்பிட சொல்வார்கள். ஆனால், நான் கொஞ்சமாக சாப்பிட்டதை பார்த்தால் அவர் நான் சாப்பிட்டு ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார். 15 ஆண்டுகளாக என் வீட்டில் எவ்வளவு சொல்லியும் சரியாக சாப்பிடாமல் இருந்த நான் ராஜ்கிரன் சாரால் தான் சாப்பிட ஆரம்பித்தேன். சில நாட்கள் பெரிய கேரிரில் சாப்பாடு வரும். அதனால் அழுது கொண்டே சாப்பிட்டு இருந்தேன். அந்த படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்று கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full