கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் டிவி பிரபலம் அரவிந்த்-சங்கீதா ஜோடி திருமணம் - குவியும் வாழ்த்துக்கள்

By subhashini · 2/2/2025

விஜய் டிவி பிரபலங்களான சங்கீதா- அரவிந்த் சேஜு ஜோடிக்கு திருமணமாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைராலகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் காதல் திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. செந்தில்- ஸ்ரீஜா, சஞ்சீவ்- ஆலியா மானசா, சிந்து-ஸ்ரேயா, வெற்றி வசந்த்- வைஷ்ணவி, ரேஷ்மா-மதன், ஷபானா- ஆர்யன் ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

தற்போது இந்த வரிசையில் அரவிந்த் சேஜு - சங்கீதா சாய் ஜோடி இணைந்து இருக்கிறார்கள். சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் சங்கீதா சாய். இவர் தொகுப்பாளினி, நடிகை, செய்தி வாசிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேல் ஐடி துறையில் பணியாற்றிய இவர், விஜேவாக ஆசைப்பட்டு ஆடிஷனில் கலந்து கொண்டார்.

விஜே சங்கீதா குறித்த தகவல்:

பின் இவர் விஜேவாக பணியாற்றிக் கொண்டே ஐடி வேலையையும் தொடர்ந்தாராம். பின், ஐடி வேலையை உதறி விட்டு முழு நேர விஜேவாக பணியாற்றினார். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார்.
அதற்குப் பிறகு இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைக்கவே சின்னத்திரை பக்கம் வந்துவிட்டார். முதலில் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான ‘அழகு’ சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, ‘கனா காணும் காலங்கள் 1 ‘ வெப் சீரிஸில் மலர் கதாபாத்திரத்தில் சங்கீதா நடித்திருந்தார்.

சங்கீதா காதல்:

அதன் பின், சில தனிப்பட்ட காரணங்களால் சங்கீதா அந்த சீரியஸிலிருந்து விலகி இருந்தார். அதற்குப்பின் சங்கீதா விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரிலும் நடித்திருந்தார். அந்த சீரியலில் இவர் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. மேலும், 30 வயது கடந்தும் திருமணம் செய்யாமல் இருந்த இவர் தன்னுடைய திருமண அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். அதாவது கனா காணும் காலங்கள் சீசன் 1, வெப் தொடரில் ஸ்டுடென்ட் ஆக நடித்தவர் தான் அரவிந்த் சேஜு. தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக வீடியோ மூலமாக அறிவித்திருந்தார்கள்.

அரவிந்த் சேஜு குறித்த தகவல்:

அரவிந்த் சேஜு அவர்கள் பிரபல பிளாக் ஷீப் யூடியூப் தொடர்களில் நடித்து பிரபலமானவர். இதன் மூலமாக தான் இவருக்கு ‘கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அய்யனார் துணை’ என்னும் சீரியலில் சோழன் என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர்களின் திருமணம் பிப்ரவரி 2ஆம் தேதியான இன்று சென்னையில் நடைபெற்று இருக்கிறது.

https://www.youtube.com/watch?app=desktop&v=40EIfiEsyIs

அரவிந்த் சேஜு -சங்கீதா திருமணம்:

கொரோனாவின் போது அரவிந்தனுடைய பெற்றோர்கள் இறந்து விட்டதால் அவருடைய அண்ணன்கள் தலைமையில்தான் திருமணம் நடை பெற்றது. இந்த திருமணத்தில் இவர்களின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திருக்கிறார்கள். தற்போது அரவிந்த்- சங்கீதா ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்

behindtalkies AMP · Quick view
View full