இதனால தான் சினிமாவ விட்டு விலகினேன்- மனம் திறந்த விஜய் பட நடிகை சங்கீதா

By subhashini · 14/10/2024

சினிமாவில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து நடிகை சங்கீதா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் சங்கீதா. இவர் கேரளாவை சேர்ந்தவர். ஆனால், இவர் வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான். இவர் ஐந்து வயதிலேயே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் நிறைய மலையாள படங்களில் சைல்ட் ஆர்டிஸ்ட் ஆக நடித்திருந்தார். பின் இவர் தமிழ் சினிமாவில் பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த என் ரத்தத்தின் ரத்தமே என்ற படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் முதன் முதலாக ஹீரோயினாக ‘எல்லாமே என் ராசா தான்’ என்ற படத்தில் கதாநாயகியாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதற்கு பிறகு இவர் நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

சங்கீதா திரைப்பயணம்:

அதற்குப் பிறகு 90களில் இறுதியில் இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. பின் இவர் 2000 ஆண்டில் தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது பலருக்குமே ஆச்சரியமாக இருந்தது. சங்கீதாவின் உடைய கணவர் பூவே உனக்காக திரைப்படத்தில் கேமராமேனாக வேலை செய்திருந்தவர். அப்போது இருந்தே இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு இருக்கிறது.

சங்கீதா குடும்பம்:

மேலும், சங்கீதா திருமணமான போது அவருக்கு 22 வயசு. அதுமட்டுமில்லாமல் அந்த நேரத்தில் அவர் தமிழ், கன்னடம், மலையாளம் என்று மூன்று மொழியிலும் பிஸியான நடிகையாக இருந்தார். ஆனால், அதை எல்லாம் யோசிக்காமல் அவர் திருமணம் செய்து கொண்டார். பின் இவர் திடீரென்று சினிமாவை விட்டு விலகினார். குடும்பம், குழந்தை என்று தனிப்பட்ட வாழ்க்கையில் சங்கீதா பிசியாக இருக்கிறார். அதற்குப்பின் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

சங்கீதா பேட்டி:

தன் கணவரோட சினிமா வேலைகளில் மட்டும் இவர் உதவி செய்திருந்தார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு மலையாள படத்தில் நடிகை சங்கீதா மீண்டும் கம்பேக் கொடுத்தார். மலையாள சினிமாவில் மட்டும் இவர் தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சங்கீதா, எனக்கு விருப்பம் இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் நான் செய்ய மாட்டேன்.

https://www.youtube.com/watch?v=U-C7c2nQIcc

சினிமாவை விட்டு விலக காரணம்:

கிளாமராக நடிக்கணும் என்ற கண்டிஷனுக்காகவே நான் நிறைய படங்களில் நடிக்கவில்லை. எனக்கு பிடித்த படங்களில் நடிப்பது தான் ரொம்ப பிடிக்கும். குழந்தை குடும்பம் என்று ஆனதால் தான் என்னால் சினிமாவில் தொடர முடியவில்லை. அவர்களை பார்த்துக் கொள்வதிலேயே எனக்கு நேரம் சரியாக இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் நடித்தேன். தமிழில் நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full