இந்த வயதில் தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம் - வீடியோ வெளியிட்ட நடிகை சனுஷ்கா.

By Rajkumar · 20/10/2020

தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இளம் நடிகை சணுஷ்கா தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் தற்போது கிடுகிடுவென வளர்ந்து விட்டார்கள். அந்த வகையில் தமிழில் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். தமிழில் 2001 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான காசி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி இருந்தார். ஆனால் தனது ஐந்து வயதிலேயே மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். காசி திரைப்படத்திற்குப் பின்னர் விக்ரம் நடிப்பில் வெளியான பீமா திரைப்படத்தில் திரிஷாவின் தங்கையாக நடித்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=d0X6ISBtA5Q&feature=youtu.be

அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மிகவும் சிறுவயதிலேயே சினிமாவில் நுழைந்து விட்டதால் அவருக்கு பெரிதாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.இருப்பினும் கமல் நடிப்பில் வெளியான எத்தனை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், கார்த்திக்நடித்த அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானத்தின் மூன்று தங்களில் ஒருவராக நடித்திருந்தார். இறுதியாக சசிகுமார் இயக்கத்தில் வெளியான கொடிவீரன் படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்திருந்தார் சனுஷா.

தற்போது கையில் எந்த பட வாய்ப்பும் இல்லாததால் மிகவும் கவலையில் இருக்கிறார் அம்மணி. இப்படி ஒரு நிலையில் இவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறியுள்ளார். “கொரோனாவின் ஆரம்ப காலம் எனக்கு பெரிய அளவில் கஷ்டத்தை கொடுத்தது. சொந்த வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் சங்கடங்கள் ஏற்பட்டன. எண்ணங்கள் என்னை பயமுறுத்தின. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. பிரச்சினைகளை யாருடன் பகிர்ந்து கொள்வது என்றும் தெரியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன். 

அப்போது மிகவும் பாசம் வைத்துள்ள எனது தம்பியை பற்றி யோசித்தேன். நான் இறந்துபோனால் அவனால் தாங்கி கொள்ள முடியாது என்பதை உணர்ந்து தற்கொலை முயற்சியை கைவிட்டேன். பிறகு டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்தேன். அதன் பிறகு எனது மனதில் இருந்து சுமைகள் விலகி பழைய நிலைக்கு மாறினேன். என்னைப்போல் யாருக்கேனும் மன அழுத்தம் இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full