நடிகர்களான சுமேத் சைகால் மற்றும் ஷாஹீன் பானு ஆகியோரின் மகள் இவர். இவர் நடிகர்களான சைரா பானு மற்றும் திலிப் குமார் ஆகியோரின் பேத்தி முறை அதாவது இவரது அம்மாவின் (ஷாஹீன் பானு) அப்பா சைரா பானுவின் சகோதரர்
தெலுங்கு திரைப்படமான அகில் (2015) திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் அறிமுகமானார் சாயிஷா. இரண்டாவது படமாக அஜய் தேவ்கானின் சிவாய் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அவரது திரைப்படமான வனமகன் ஜூன் மாதம் 2017 இல் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்இவர் அறிமுகமானார்.
2018 இல், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம், விஜய் சேதுபதியுடன் ஜுங்கா, மற்றும் ஆர்யாவுடன் கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்தார். காப்பான் படத்தில் சூர்யாவுடன் நடித்தார்.

ஆர்யாவுக்கு பெண் பார்த்த தொலைகாட்சி நிறுவனம் :-

பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி கடந்த வருடம் ஒளிபரப்பானது. இதில் கலந்துகொண்ட 18 பெண்களில் நடிகர் ஆர்யா தனக்கு விருப்பமான ஒரு பெண்ணை தேர்வு செய்யும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு சுற்றுகள் இடம்பெற்றன. இறுதிச்சுற்றில் மூன்று பெண் போட்டியாளர்கள் தேர்வாகினர். அதில் சுசானா, சீதாலட்சுமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ஒருவரை ஆர்யா தேர்ந்தெடுப்பார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் மூன்று போட்டியாளர்களில் இருந்து ஒருவரை என்னால் தேர்வு செய்ய முடியாது.

Advertisement

ஆர்யா ஏமாற்றி விட்டார் :-

எனக்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படுகிறது. ஒருவரை இப்போது தேர்வு செய்தால் மற்ற இருவரும் ஏமாற்றம் அடைவார்கள் என்று நடிகர் ஆர்யா தன்னுடைய முடிவை அறிவித்தார். இந்தநிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண்களை நடிகர் ஆர்யா ஏமாற்றி விட்டதாகவும், நிகழ்ச்சியில் தனக்கான ஜோடியைத் தேர்ந்தெடுக்க மறுத்துவிட்டார் என்றும் பார்வையாளர்கள் தங்களது விமர்சனங்களை சமூகவலைதளங்களில் முன்வைத்தனர்.

காதலர் தினத்தில் திருமணம் செய்யபோவதாக சொன்ன சயீஷா :-

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர். வனமகன் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.பின் ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் மற்றும் காப்பான் படங்களை நடிக்க அந்த நேரத்தில் அவருடன் காதல் ஏற்பட்டது. 14 பிப்ரவரி 2019 அன்று சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கும் ஆர்யாவிற்கும் மார்ச் மாதத்தில் திருமணம் என்று அறிவித்தார். இவர்களது திருமண விழா ஐதராபாத்தில் 8 மார்ச்சு 2019 இல் தொடங்கியது. இந்தி மற்றும் தமிழ் திரைப்படத்தை சேர்ந்த பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisement

மார்டனாக சயீஷா போட்டோ ஷுட் :-

2019ம் ஆண்டு ஆர்யா மற்றும் சயீஷாவிற்கு திருமணம் நடந்தது,அதன் பிறகு டெடி என்ற என்ற படத்தில் கனவன், மனைவி இருவருமே ஜோடியாக நடித்தனர்.அவர்களுக்கு 2021ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்து அதை நடிகர் விஷால் தனது டுவீட்டர் பக்கத்தில் வெளீயிடடார். திருமணம், குழந்தை பெற்ற பிறகு ஸ்டைலான போட்டோ ஷுட்
திருமணம், குழந்தை என சினிமா பக்கமோ போட்டோ ஷுட் பக்கமோ வராமல் இருந்த சயீஷா இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளார். அதாவது அண்மையில் செம மாடனான உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

Advertisement
Advertisement