மருத்துவமனையில் அட்மிட்டான ஷாலினி, ஆறுதல் சொல்லிய அஜித்- என்னாச்சு? வைரலாகும் புகைப்படம்

By subhashini · 3/7/2024

நடிகை ஷாலினி அஜித் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் அஜித் குமார். இவருடைய நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு அஜித்குமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த தகவலை கேட்டதும் அவருடைய ரசிகர்கள் பலருமே பதறி போய் விட்டார்கள். பின் விசாரித்த போது தான் அஜித் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் சென்றிருந்தார் என்று தெரிந்தது. குறிப்பிட்ட வயதிற்கு மேலானவர்கள் முழு உடல் பரிசோதனை மற்றும் வழக்கமான பரிசோதனை செய்வது வழக்கம் தான். உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப முன்கூட்டியே சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

ஷாலினி உடல்நிலை:

இதனால் நடிகர் அஜித்குமாரும் முழு உடல் பரிசோதனை செய்து இருந்தார். இந்த நிலையில் நடிகை ஷாலினி மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை ஷாலினி உடல்நலக்குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். இதனால் படப்பிடிப்பில் இருக்கும் அஜித் சென்னைக்கு வருவாரா? வரமாட்டாரா? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது. இருந்தாலுமே, அஜித் தன்னுடைய காதல் மனைவி தான் முக்கியம் என்று சூட்டிங்கை ரத்து செய்து சென்னைக்கு வந்திருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)

ஷாலினி போஸ்ட்:

மேலும், தன்னுடைய மனைவி ஷாலினியின் கைகளை பிடித்துக் கொண்டு அஜித் ஆறுதல் சொல்லி இருக்கிறார். அந்த புகைப்படத்தை தான் நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே, காலங்கள் கடந்தாலும் உங்களுடைய காதல் மாறாது. இப்படி ஒரு கணவர் கிடைக்க ஷாலினி கொடுத்து வைத்திருக்க வேண்டும். சீக்கிரமாகவே ஷாலினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

அஜித் திரைப்பயணம்:

கடைசியாக இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து தற்போது அஜித் அவர்கள் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது.

விடாமுயற்சி படம்:

அதன் பின் அஜித்தின் இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full