ஊரே அறிந்த எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை ஷாலினி கேட்ட அந்த கேள்வி. சத்தம் போட்டு சிரித்த எம்.ஜி.ஆர். சுவாரஸ்ய சம்பவம்.

By subhashini · 20/1/2024

நடிகை ஷாலினி எம்ஜிஆரை பார்த்து கேட்டிருக்கும் கேள்வி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஷாலினி. இவரை பலரும் பேபி ஷாலினி என்று தான் சொல்வார்கள். இவர் கேரளாவை பூர்விகமாகக் கொண்டவர். இவர் குழந்தையாக இருக்கும்போதே சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். மேலும், இவருடைய மழலை குரலுக்கும் அழகிய குழந்தை முகத்திற்கும் என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது.

மலையாளத்தில் மட்டும் பேபி ஷாலினி அவர்கள் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஷாலினி அவர்கள் மலையாள படத்தில் தான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

ஷாலினி திரைப்பயணம்:

இன்றும் விஜய்-ஷாலினி நடித்த காதலுக்கு மரியாதை படம் ரசிகர் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இவர் மீண்டும் விஜயுடன் சேர்ந்து கண்ணுக்குள் நிலவு என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்குப்பின் இவர் மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளிவந்த அலைபாயுதே என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஷாலினி மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

ஷாலினி-அஜித் திருமணம்:

அதனை எடுத்து இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த அமர்க்களம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் போதே அஜித்- ஷாலினி இருவருக்குமே இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு ஷாலினி சினிமாவிலிருந்து முழுமையாக விலகிவிட்டார். கடைசியாக இவர் பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். தற்போது இவர் குடும்பம், குழந்தைகளை கவனித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஷாலினி எம்ஜிஆர் இடம் கேட்டிருக்கும் சுவாரஸ்ய தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

ஷாலினி கேட்ட கேள்வி:

அதாவது, கே ஆர் விஜயா தங்கை திருமணத்தில் பேபி ஷாலினி கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் முன்னணி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அந்த திருமணத்திற்கு முதலமைச்சராக இருந்த எம் ஜி ஆர் ம் வந்திருந்தார். பலருமே அவர் அருகில் செல்ல பயந்து இருந்தார்கள். ஆனால், எம்ஜிஆரை பார்த்ததுமே ஷாலினி ஜாலியாக அவர் பக்கத்தில் போய் நின்றார். பின் தன் கையில் இருந்த சந்தன மாலையை எம்ஜிஆருக்கு அணிவித்தார். ஷாலினியை எம்ஜிஆர் அள்ளி கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார். பின் அவரிடம் உங்க பேர் என்ன? என்று ஷாலினி கேட்டவுடன்.

எம்ஜிஆர் சொன்ன பதில்:

எம்ஜிஆர் சிரித்துக் கொண்டு எம்ஜிஆர் என்று கூறியிருக்கிறார். ஷாலினி, இதுதான் தெரியுமே. அப்படின்னா என்ன அர்த்தம்? என்று மறுபடியும் கேட்டிருக்கிறார். எம்ஜிஆர் பலமாக சிரித்துக் கொண்டே எம் ஜி ராமச்சந்திரன் என்று அழுத்தமாக சொன்னார். அப்ப ஏன் எல்லோரும் உங்களை எம்ஜிஆர் என்று சொல்கிறார்கள்? என்று திரும்பவும் ஷாலினி கேட்க மறுபடியும் எம் ஜி ஆர் பலமாக சிரித்தாராம். அதுமட்டுமில்லாமல் எம்ஜிஆர் உடன் ஷாலினி எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் ஷாலினி அணிந்திருந்த பிங்க் நிற கவுனை ஷாலினி இன்னமும் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full