அந்த நிமிஷமே அவர் மீது மரியாதை போய்டுச்சி- ஸ்ருதி ஹாசன் மேடையில் ஆடிய போது மோகன் லால் செய்த செயல் குறித்து சாந்தி வில்லியம்ஸ்
ஹேமா கமிட்டி தொடர்பாக நடிகை சாந்தி வில்லியம்ஸ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது.
பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். அதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பின் கடந்த 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
ஹேமா கமிட்டி அறிக்கை:
இது குறித்து கேரள சினிமாவில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இந்த ஹேமா கமிட்டி விவகாரம் தொடர்பாக இதுவரை மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டி எதுவுமே பேசவில்லை. இதை அடுத்து மலையாள திரைப்பட சங்கமான அம்மா சில தினங்களுக்கு முன்பு தான் கலைக்கப்பட்டது. பாலியல் புகார் குறித்து ஆலோசிக்க அம்மா சங்கம் கூடுவதாக இருந்த நிலையில் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள் ராஜினாமா செய்து விலகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சாந்தி வில்லியம்ஸ் பேட்டி:
இதை அடுத்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகரும், அம்மா அமைப்பின் முன்னாள் தலைவருமான மோகன்லால் விளக்கம் கொடுத்தார். இருந்தாலும், மோகன்லாலை செய்தியாளர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே போனதால் ரொம்பவே திணறி விட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை சாந்தி வில்லியம்ஸ் பேட்டியில், மலையாள சினிமாவில் அந்த காலத்தில் இருந்தே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள், அட்ஜஸ்ட்மென்ட் போன்ற பிரச்சனைகள் இருப்பது உண்மைதான். எனக்கு 16 வயசு இருக்கும்.
https://www.youtube.com/watch?v=GwhN7JTFQTo
மோகன்லால் செய்த வேலை:
இந்த பிரச்சனைகள் நிறையவே இருந்தது. இது எல்லாம் வேண்டாம் என்று தான் மலையாள சினிமாவில் இருந்து தமிழில் நடிக்க ஆரம்பித்தேன். எனக்கு தமிழில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மோகன்லால் ராஜினாமா செய்தது என்பது தவறான செய்கை. அந்த பதவியில் இருந்தே இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை? ஒரு முறை மோகன்லால், மம்மூட்டி, சித்திக் எல்லாம் இருக்கும் போது மோகன்லால் அந்த இடத்தில் ஆடும் பெண்ணை பார்த்து ஒரு தவறான செய்கை செய்து இருந்தார். அந்த நடனம் ஆடும் பெண் பிரபல நடிகருடைய மகள். அந்த நிமிஷம் அவர் மேல் இருந்த அபிப்ராயம் மக்களுக்கு போய்விட்டது. செய்த தவறுக்காக அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள்.
மலையாள சினிமா குறித்து சொன்னது:
வீட்டில் மனைவியை வைத்துக்கொண்டு ஏன் ஒரு பெண்ணை கஷ்டப்படுத்துகிறீர்கள். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரச்சனைகள் வெளிவந்திருக்க வேண்டும். அப்போதெல்லாம் ஏன் சொல்லவில்லை என்றால் இப்ப இருக்கிற பசங்களெல்லாம் தைரியமாக இருக்கிறார்கள். அப்போ இருந்தவர்கள், ஐயோ! அவங்களா? என்ற பயத்தில் ஒதுங்கி இருந்தார்கள். சித்திக் எல்லாம் ஒரு நல்ல இடத்தில் வைத்து இருந்தேன். ஆனால், ரொம்ப சீப்பாக கீழே சகதியில் இருக்கும் புழுவை விட கேவலமா பாக்குற நிலைமை ஆகிவிட்டது. வயதானவர்கள் கூட பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுப்பது நடந்திருப்பது உண்மைதான். எனக்கே கூட நடந்து இருக்கிறது. மலையாளத்தை பொறுத்தவரை வயது என்பது ஒன்னும் கிடையாது, it is number என்று கூறி இருக்கிறார். அதோடு ஏற்கனவே நிறைய முறை மோகன்லால் குறித்து விமர்சித்து சாந்தி வில்லியம்ஸ் பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.