48 வயதில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த கவுண்டமணி காமெடி நடிகை - அதற்கு அவர் சொன்ன காரணம்.

By subhashini · 26/6/2023

48 வயதில் நடிகை ஷர்மிலி கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருந்தவர் ஷர்மிலி. இவர் 90 காலகட்டத்தில் நகைச்சுவை மற்றும் கவர்ச்சி வேடங்களில் படங்களில் நடித்திருக்கிறார். பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து விலகி விட்டார். இருந்தாலும், நடிகை சர்மிலியின் கவர்ச்சிக்காக ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் நடிகை ஷர்மிலி கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. தற்போது இவருக்கு 48 வயதாகிறது. இவர் கர்ப்பமாக இருப்பதை குறித்து பலருமே பல விதமாக சோசியல் மீடியாவில் கருத்து போட்டு வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சர்மிலி பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், நான் 13 வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறேன். நான் பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருப்பது உண்மை தான்.

ஷர்மிலி அளித்த பேட்டி:

அதனால் நான் கொஞ்சம் கவனமாக இருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் பலரும் எச்சரிக்கையாக இருக்க சொல்கிறார்கள். ஆனால், சிலர் சர்மிளிக்கு இந்த வயசில் இதெல்லாம் தேவையா? என்று சொல்கிறார்கள். நீங்கள் எல்லாம் குழந்தைகளை பெற்றுக் கொண்டீர்கள். அந்த குழந்தைகள் எல்லாம் வளர்ந்து விட்டது. நான் என்ன பண்ணுவது? அப்போ பெத்திருந்தால் கூட எப்படி காப்பாற்றி இருப்போம் என்று எனக்குத் தெரிந்திருக்காது.

குழந்தை குறித்து சொன்னது:

இப்போது கர்ப்பமாக இருப்பதால் குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்போதான் எனக்கு மெச்சூரிட்டி வந்திருக்கிறது. இளம் வயதில் நான் குழந்தை பெற்று இருந்தால் இந்த நேரம் என் குழந்தை காலேஜ் போய் இருப்பார்கள். கடவுள் எனக்கு வாழ்க்கையை தாமதமாக தான் கொடுத்தார். 40 வயதுக்கு மேல் தான் எனக்கு வாழ்க்கையை கடவுள் கொடுத்தார். குழந்தையையும் 40க்கும் மேல தான் கொடுத்துள்ளார். எல்லாமே எனக்கு தாமதமாக தான் கிடைத்தது. குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாத வயதில் நான் குழந்தையை பெற்றுக் கொள்ளப் போகிறேன்.

திருமணம் குறித்து சொன்னது:

என்னுடைய கணவர் அரவிந்த் ஐடியில் வேலை செய்கிறார். நான் இப்போது சினிமாவில் இல்லை. சீரியலில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதை பற்றி சிந்திக்க வேண்டும். நான் ஆரம்பத்தில் கல்யாணம் வேண்டாம் ஜாலியாக இருக்கலாம், சம்பாதிக்கலாம், சாப்பிடலாம் என்று நினைத்தேன். 40 வயதிற்கு மேல் தான் எனக்கு துணை வேண்டும் என்று தெரிந்தது. இளம் வயதில் நமக்கு ஒரு துணை வேண்டும் என்று தெரியாது. நல்லவனா தான் கிடைக்க வேண்டும் என்று நினைக்க கூடாது.

கணவர் குறித்து சொன்னது:

கிடைக்கும் வாழ்க்கையை நன்றாக மாற்றிக் கொள்ள வேண்டும். நம்மை மட்டும் நம்பி இருக்கிறவர்கள் நமக்கு வேண்டாம். நம்மை காப்பாற்றுபவர்கள் கிடைத்தால் போதும். நம் ஊதியத்தை நம்பி அவர்கள் இருக்கக் கூடாது. சம்பாதிக்கும் நபரை பார்த்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். என்னுடைய கணவர் இதுவரை என்னுடைய பெயரை சொல்லி கூட அழைத்ததில்லை. இருவரும் அம்மு என்று தான் மாறி மாறி சொல்லிக் கொள்வோம். அந்த அளவிற்கு அவர் ரொம்ப நாகரிகமானவர். 20 வருடத்திற்கு முன்னாடி அவர் வந்திருந்திருக்கலாம். நான் குழந்தை பிறந்த பிறகு ஒரு வருடம் கழித்து தான் நடிப்பு பற்றி யோசிக்க வேண்டும் என்று மகிழ்ச்சியில் ஷர்மிலி கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full