தமிழ் எனக்கு தெரியாது, ஆனால் இங்கு தான் ஆதரவு அதிகமாக இருக்கு - பட விழாவில் நடிகை ஷில்பா மஞ்சுநாத்

By subhashini · 23/7/2025

தமிழ் சினிமா பற்றி நடிகை ஷில்பா மஞ்சுநாத் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக ஷில்பா மஞ்சுநாத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த எமன் படத்தின் மூலம் தான் அறிமுகமாகியிருந்தார்.

இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கித்தந்தது. அதனை தொடர்ந்து இவர் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். தற்போது தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஷில்பா மஞ்சுநாத் உருவாக்கி இருக்கிறார்.

ஷில்பா மஞ்சுநாத் திரைப்பயணம்:

தமிழில் இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த காளி, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களில் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சென்னை பைல்ஸ்- முதல் பக்கம்.

ஷில்பா மஞ்சுநாத் படம்:

இந்த படத்தில் வெற்றி, தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அனீஸ் அஸ்ரப் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு அரவிந்த் ஒளி பதிவு செய்து இருக்கிறார், ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். கில்லர் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது.

View this post on Instagram

A post shared by PT PRIME (@ptprimeofficial)

படத்தின் விழாவில் ஷில்பா மஞ்சுநாத்:

இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை ஷில்பா மஞ்சுநாத் தமிழ் திரையுலகம் குறித்து பேசி இருக்கும் விஷயம்தான் தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் அவர், ஒவ்வொரு முறையும் நான் இங்கு வந்து மேடை ஏறி நிற்கும்போது எனக்கு பயமாகத்தான் இருக்கும். எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தமிழ் சினிமா துறைக்கும் இந்த மண்ணிற்கும் ரொம்பவே நன்றி. முதன்முதலில் நான் இங்கு நடிக்க வரும்போது தமிழே தெரியாது, சரியாக நடிப்பும் வராது. ஆனால், அது எதுவும் பெரிது படுத்தாமல் இங்கு மட்டும்தான் எனக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது.

https://www.youtube.com/watch?v=0U1kC8kGOUs

ஷில்பா மஞ்சுநாத் சொன்னது:

தமிழ் சினிமா துறை திறமையை மதிக்கிறார்கள், வாய்ப்பு கொடுக்கிறார்கள். காளி, ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், சிங்க பெண்ணே போன்ற படங்களில் எல்லாம் நடித்திருக்கிறேன். நிறைய படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் நான் பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன். இதற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் ரொம்பவே பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full