நாங்க உடை மாத்த இத தான் பண்ணுவோம் - கேரவன் கலாச்சாரம் பற்றி சோபனா சொன்ன விஷயம்

By subhashini · 28/12/2024

கேரவன் கலாச்சாரம் பற்றி நடிகை சோபனா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் சோபனா. இவர் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார்.

இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், சோபனா அவர்கள் திரைப்பட நடிகை என்பதை விட புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர் ஆவார். இவர் பரத பரதநாட்டியக் கலைக்காக பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கிறார். பின் இவர் சினிமா உலகில் வாய்ப்புகள் குறைந்த உடன் நடிப்பில் இருந்து விலகி விட்டார். இவர் பல வருடங்களாக பரதநாட்டியம் கிளாஸை நடத்தி வருகிறார். இதன் மூலம் பல மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார்.

ஷோபனா பேட்டி:

அது மட்டும் இல்லாமல் இவர் சமீப காலமாக தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் கேரவன் கலாச்சாரம் குறித்து நடிகை சோபனா கூறி இருப்பது, கேரவன் என்பது என்னை பொருத்தவரை தயாரிப்பு நிறுவனத்திற்கு தேவையில்லாத வீண் செலவு தான். அப்போதெல்லாம் எங்களுக்கு கேரவனே கிடையாது. உடை மாற்ற வேண்டும் என்றால் மறைவதற்கு நாங்கள் சரியான இடம் எங்கிருக்கிறது என்றுதான் பார்ப்போம்.

கேரவன் கலாச்சாரம்:

சில நேரங்களில் உடை மாற்றுவதற்கு என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வீடு ஒன்றை தயாரிப்பு நிறுவனம் ரெடி பண்ணி தருவார்கள். ஆனால், அந்த இடம் ரொம்ப தூரமாக இருப்பதால் நாங்கள் சூட்டிங் ஸ்பாடிலேயே மறைவான இடத்தில் எங்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொண்டு மாற்றுவோம். அப்படித்தான் நாங்கள் இருந்தோம். நான் நடித்த காலத்திலிருந்த நடிகைகள் அனைவருமே அப்படித்தான் செய்தார்கள். தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

கேரவன் ப்ரச்சனை:

அது மட்டும் இல்லாமல் கேரவனில் இருக்கும் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் விஷயங்களை எல்லாம் கற்றுக் கொள்ள முடியும். ஆனால், கேரவனுக்கு சென்று விட்டால் அது எல்லாம் எதுவுமே தெரியாமல் போய்விடும். மற்ற நடிகர்களுடைய வசனங்கள், ஷூட்டிங் பாட்டில் நடக்கும் விஷயங்கள், அனுபவங்கள் என பல விஷயங்கள் கேரவனால் மறைக்கப்பட்டது. தற்போது எல்லாம் கேரவன் என்பது ஒரு பெரிய அந்தஸ்தாக நினைக்கிறார்கள்.

தவறாக எடை போடுதல்:

காரணம், நான் ஒரு இந்தி படம் நடிக்கப் போயிருந்தேன். அது மிகப்பெரிய பட்ஜெட் படம். அப்போது என்னிடம், உங்களுடன் எவ்வளவு பேர் வருவார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நான், யாரும் இல்லை. நான் மட்டும்தான் என்று சொன்னேன். உடனே அவர்கள் ஷாக் ஆனார்கள். அதோடு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரே சந்தோஷம். இருந்தாலுமே, சில சமயங்களில் அவர்கள் என்னை குறைவாக எடை போடுகிறார்கள். அதுதான் பிரச்சனையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full