தன் வீட்டில் பணம் திருடிய பணிப்பெண்ணை நெகிழ வைத்த ஷோபனா - இப்படி ஒரு நடிகையா ?

By Rajkumar · 29/7/2023

தன் வீட்டில் திருடிய பணிப் பெண்ணை மன்னித்து மீண்டும் நடிகை சோபனா வேலைக்கு சேர்த்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சோபனா. இவர் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார்.

இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். சோபனா அவர்கள் திரைப்பட நடிகை என்பதை விட புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர் ஆவார். இவர் தன்னுடைய பரதநாட்டியக் கலைக்காக பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். மேலும், இவர் சினிமா உலகில் வாய்ப்புகள் குறைந்த உடன் நடிப்பில் இருந்து விலகி விட்டார். இவர் பல வருடங்களாக பரதநாட்டியம் கிளாஸை நடத்தி வருகிறார்.

சோபனா திரைப்பயணம்:

இதன் மூலம் பல மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சமீப காலமாக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் நடிகை சோபனா வீட்டில் திருட்டு நடந்திருக்கும் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சோபனா அவர்கள் தன்னுடைய தாயருடன் சென்னை தேனாம்பேட்டை சீனிவாச சாலையில் வசித்து வருகிறார். இவருடைய வீடு மூன்று அடுக்கு கொண்டது.

சோபனா வீட்டில் திருட்டு:

அந்த வீட்டின் முதல் தளத்தில் இவருடைய தாயார் ஆனந்தம் இருக்கிறார். இரண்டாவது தளத்தில் நடிகை சோபனா இருக்கிறார். பரதநாட்டிய பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. மேலும், இந்த வீட்டில் விஜயா என்ற பெண் ஒரு வருடமாக தங்கி சோபனாவின் தாயாரை கவனித்து வருகிறார். இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்தவர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சோபாவின் தாயார் ஆனந்தம் வீட்டில் வைத்திருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமா காணாமல் போயிருக்கிறது.

போலீஸ் விசாரணை:

இதனால் சந்தேகம் அடைந்த ஷோபனா பணிப்பெண் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்து இருக்கிறார். அதன்படி போலீசார் நடிகை சோபனா வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அப்போது பணிப்பெண் விஜயா கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சிறுக சிறுக 41,000 திருடி இருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும், திருடிய பணத்தை அவர் கார் ஓட்டுநர் முருகன் என்பவரிடம் கொடுத்து ஊரில் உள்ள தன் மகளுக்கு அனுப்பி இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

மன்னித்த சோபனா:

வறுமையின் காரணமாக தான் இவர் பணத்தை திருடினார் என்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின் சோபனாவிடமும் மன்னிப்பு கேட்டார். இதனால் ஷோபா மனம் மாறி கொடுத்த புகாரை திரும்ப பெற்றிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அந்த பெண்ணை மன்னித்து மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் திருடிய பணத்தை சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்வதாகவும் சோபனா கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full