கடற்கையில் அமர்ந்து தன் மகளுக்கு பாலூட்டிய ஸ்ரேயா - வைரலாகும் குயூட் புகைப்படம்.

By Rajkumar · 25/11/2021

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். மாடல் அழகியான இவர் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார் அதன் பின்னர் தமிழில் வெளியான உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. நடிகை ஸ்ரேயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நடிகர் விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

தொடர்ந்து படங்களில் நடித்து ஸ்ரேயா இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். இடையிடையே ஒரு சில படங்களில் நடித்து ஸ்ரேயா இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். திடீரென்று ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

பின்னர் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா சமீபத்தில் தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாக திடீரென்று அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருந்தார். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பிரபலங்கள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை படு வித்தியாசமாக அறிவிப்பார்கள்.

அதுமட்டுமல்லாமல் கர்ப்பமான முதல் நாள் முதல் குழந்தை பிறக்கும் வரை விதவிதமான போட்டோ ஷூட்களை எடுத்து அதை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், தான் கர்ப்பமாக இருப்பதை கூட அறிவிக்காமல் படு சீக்ரெட்டாக வைத்து குழந்தை பிறந்து பல மாதங்கள் கழித்தே அறிவித்தார் ஸ்ரேயா. இப்படி ஒரு நிலையில் தன் மகளுடன் பீச்சில் ஆட்டம் போட்ட ஸ்ரேயா, கடற்கரை ஓரம் அமர்ந்துகொண்டு தன் மகனுக்கு பால் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full