இல்ல, ரோஜா மாதிரி மணக்கும் - கருமம், கருமம் - இந்த கேள்விக்கு கூடவா பதில் அளிப்பாங்க - வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 9/6/2021

தமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான '7 ஆம் அறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

https://twitter.com/Mysteri13472103/status/1402303167233028100

இவர் 2000 வெளியான இவரது தந்தை கமல் ,பாலிவுட் நடிகர் ஷாருகான் ஆகிவோர் நடித்த ஹேராம் என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சிறு வயது முதலே தாம் ஒரு பாப் சிங்கர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ள ஸ்ருதி பல பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.மேலும் தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.

இதையும் பாருங்க : இலங்கை தமிழருடன் திருமணம் மூன்று குழந்தைகள் - 45 வது பிறந்தநாளை கொண்டாடிய ரம்பா. எப்படி இருக்கார் பாருங்க.

7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி.பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்த மூலம் இந்தியிலும் கால் பதித்தார் ஸ்ருதி ஹாசன். இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காணமுடியவில்லை.

மேலும் இவரது தந்தை கமல்ஹாசன் இயக்கி நடித்து வந்த பல்ராம் நாயுடு படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது ஆனால் அந்த படமும் கைவிடப்பட்டதால் தற்போது அம்மணியை எந்த படத்திலும் காணமுடியவில்லை. இருப்பினும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் ரசிகர்கள் கேட்கும் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர், ரசிகர் கேட்ட மோசமான கேள்விக்கு கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் பதில் அளித்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full