என் முதல் படத்தில் இருந்தது தான் என் உண்மையான மூக்கு - ஒப்புக்கொண்ட ஸ்ருதி ஹாசன்
தனது மூக்கில் செய்யப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து ஸ்ருதிஹாசன் கூறியிருக்கும் விஷயம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஸ்ருதி ஹாசன். இவர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன்பு இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருக்கிறார். அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை. மேலும், ஸ்ருதிஹாசன் நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், கடைசியாக இவர் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிப்பில் வெளிவந்த சலார் படத்தில் நடித்து இருந்தார்.
ஸ்ருதிஹாசன் திரைப்பயணம்:
இதை அடுத்து இவர் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ருதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதைத் தொடர்ந்தும் இவர் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
பிளாஸ்டிக் சர்ஜரி:
சினிமாவை பொருத்தவரை நடிகைகள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது வாடிக்கையான ஒரு விஷயம் தான். ஸ்ரீதேவி துவங்கி நயன்தாரா, சமந்தா வரை பல முன்னணி நடிகைகள் அழகிற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், பெரும்பாலான நடிகைகள் அவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதை படு ரகசியமாகவே தான் வைத்து வருகின்றனர். ஆனால் ஸ்ருதிஹாசன் அப்படி இல்லை.
ஸ்ருதியின் வெளிப்படையான பேச்சு:
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ஸ்ருதிஹாசன் தனது மூக்கில் செய்து கொண்ட பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதில், எப்பொழுதும் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டது குறித்த கேள்வி என்னைச் சுற்றி உலாவி வந்து கொண்டே இருக்கிறது. ஆமாம், நான் என் மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டேன். என் மூக்கை உடைத்து சரி செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது. என்னுடைய மூக்கு முன்பெல்லாம் வித்தியாசமாக இருந்தது. என் முதல் படத்தில் இருந்தது தான் என்னுடைய உண்மையான பழைய மூக்கு. நான் எனது மூக்கை சரி செய்ததற்கு யாரிடமும் நியாயப்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
கட்டாயப்படுத்த வேண்டாம்:
மேலும், எனக்கு என்னை அப்படி பார்க்கத்தான் பிடித்திருக்கிறது. நாளை நீங்கள் பேஸ் லிப்டிங் செய்வீர்களா என்று என்னை கேட்டால், நான் பண்ணலாம், பண்ணாமலும் போகலாம். யாருக்குத் தெரியும். இது என்னுடைய உடம்பு. அதே மாதிரி பிறர் செய்வது குறித்தும், செய்யாதது குறித்தும் நான் எப்போதும் பொருட்படுத்த விரும்பவில்லை. யாராவது வந்து என்னிடம் ஸ்ருதி லிப் பில்லர்ஸ் பண்ணிக்கோங்கன்னு சொன்னா, நோ, நான் பண்ண மாட்டேன். உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் செய்து கொள்ளுங்கள். என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்று ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.