திருமணத்தை நினைத்தால் பயம், ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை - நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்

By subhashini · 13/7/2025

திருமணம் பற்றி வெளிப்படையாக நடிகை ஸ்ருதிஹாசன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஸ் ஸ்ருதிஹாசன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு' படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன்பு இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக படத்தில் நடித்து இருந்தார்.

அதோடு தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட ஸ்ருதிஹாசன் பாடி இருந்தார் . இவர் 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருந்தார். அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை.

ஸ்ருதிஹாசன் குறித்த தகவல்:

மேலும், ஸ்ருதிஹாசனுக்கு நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இடையில் சில காலம் சுருதிஹாசனின் நடிப்பில் பெரிதாக படம் எதுவுமே வராமல் இருந்தது. அதற்குப் பின்னர் இவர் மீண்டும் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் பெஸ்ட்செல்லர் என்ற வலைத்தொடர் வெளிவந்து இருந்தது. இதனை தொடர்ந்து வால்டர் வீரய்யா மற்றும் வீ ர சிம்ஹா ரெட்டி போன்ற படங்களில் சுருதிஹாசன் நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது.

ஸ்ருதிஹாசன் படங்கள்:

அதன் பின் இவர் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாறன் நடிப்பில் வெளிவந்த சலார் படத்திலும் நடித்து இருந்தார். தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் நாகார்ஜுனா மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்ருதிஹாசன் பேட்டி:

இதை அடுத்து இவர் விஜய் சேதுபதியின் டிரெயின் என்ற படத்திலும் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் நடிக்கும் ஜனநாயகன் என்ற படத்தில் கேமியோ ரோலில் சுருதிஹாசன் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை ஸ்ருதிஹாசன் திருமணம் குறித்து கூறியிருந்தது, திருமணம் என்றாலே எனக்கு பயமாக இருக்கிறது. என்னுடைய அடையாளத்தை ஒரு சிறிய காகிதத்துடன் இணைக்க கூடாது என்று நினைக்கிறேன். திருமணம் பற்றிய கொள்கைகளை எல்லாம் நான் மதிக்கிறேன். ஆனால், அவற்றை சட்ட ஆவணம் ஆக்கும் போது தான் அது எனக்கு வேண்டாம் என்று நினைக்கிறேன்.

திருமணம் பற்றி சொன்னது:

ஒரு காலத்தில் நான் திருமணம் செய்து கொள்ள இருந்தேன். ஆனால், அந்த உறவின் உடைய இணக்கமின்மை காரணமாக தான் காதல் முறிந்தது. திருமணம் என்பது ரெண்டு நபர்களை மட்டும் கொண்டது கிடையாது. குழந்தைகள், எதிர்காலம் வாழ்நாள் பொறுப்பை பற்றியது. மேலும், நான் எப்போதுமே ஒரு தாயாக இருக்க விரும்புகிறேன். ஆனால், பிறக்கும் குழந்தையை ஒற்றை பெற்றோராக வளர்க்க விரும்பவில்லை. ஒரு குழந்தையினுடைய வளர்ச்சிக்கு இரண்டு அன்பான அர்ப்பணிப்பு உள்ள பெற்றோர்கள் தேவைப்படுகிறார்கள். எதிர்காலத்தில் குழந்தையை தத்தெடுக்கலாம்ன்னு இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full