நான் என்ன பண்ணனும், எப்படி பண்ணனும்ன்னு அவர் தான் சொன்னார் - ஸ்ருதி நாராயணன் பளீச் பதில்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணன் ஹீரோயினியாக அறிமுகமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக ஸ்ருதி நாராயணன் பஞ்சாயத்து தான் சென்று கொண்டு இருக்கிறது. சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் தோழியாக வித்யா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்ருதி நாராயணன். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பார்த்து சிலர் இது மார்ப்பிங் வீடியோ என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் படத்தின் வாய்ப்புக்காக தான் இவர் இப்படியெல்லாம் வீடியோ செய்து வெளியிடுகிறார் என்று கூறுகிறார்கள். ஆனால், இவருடைய வீடியோ சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. பின் இது தொடர்பாக சுருதி நாராயணன் போட்ட பதிவில், ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட வீடியோ, மார்ப்பிங் செய்யப்பட்டது என்று கூறியிருந்தார்.
சீரியல் ஸ்ருதி நாராயணன் வீடியோ:
இருந்துமே விடாமல் சுருதி நாராயணனை சோசியல் மீடியாவில் மோசமாக விமர்சித்தும் திட்டியும் வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக ஸ்ருதி நாராயணன் பதிவில், எனக்குமே உணர்ச்சிகள் இருக்கிறது. எனக்கு நெருக்கமானவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. அதை நீங்கள் ரொம்ப மோசமாக விமர்சித்து போடுகிறீர்கள். இப்படி காட்டுத்தீயாய் போல பரப்பாதீர்கள். வீடியோ பார்க்க வேண்டும் என்றால் உங்களுடைய அம்மா, சகோதரி அல்லது காதலி வீடியோவை பாருங்கள். ஏனென்றால் அவர்களும் பெண்தான்.
ஸ்ருதி நாராயணன் நடித்து இருக்கும் படம்:
அவர்களுக்குமே என்னை போன்ற உடல் இருக்கிறது. கமெண்டில் என்னைத்தான் எல்லோருமே குறை சொல்கிறார்கள். அந்த வீடியோவை லிங்க் செய்தவரை எந்த கேள்வியுமே கேட்கவில்லையே ஏன்? என்று ஆக்ரோஷமாக கூறி இருந்தார். இதை அடுத்து சிலர் ஸ்ருதி நாராயணனுக்கு ஆதரவாகவும், அவருக்கு எதிராகவும் கருத்துக்களை போட்டு வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஸ்ருதி நாராயணன் தற்போது வெள்ளி திரையில் நடிகையாகி இருக்கிறார். இவர் கட்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ரங்கராஜ்.
https://www.youtube.com/watch?v=Mm9idHloFKc
ஸ்ருதி நாராயணன் பேட்டி:
பிரீத்தல் அண்ட் ஜாக்வி தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஜெயபாரதி ரங்கராஜ் என்பவர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீடு விழா நடைபெற்று இருந்தது. இதில் கலந்துகொண்ட நடிகை ஸ்ருதி நாராயணன், எனக்கு இந்த பட வாய்ப்பு கொடுத்த இயக்குனர் ரங்கராஜன் சாருக்கு ரொம்ப நன்றி. இந்த படத்தில் நான் செகண்ட் ஹீரோயினியாக நடித்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஒரு ஆர்டிஸ்ட் கதாபாத்திரம் என்பது கதைக்கு ஏத்த மாதிரி மாறும். இந்த படத்தில் எனக்கு கொடுத்திருந்த கதாபாத்திரம் நான் ரொம்ப டிபிகல்ட்டாக எஸ்டாபிலிஸ் நடித்திருக்கிறேன். நான் சினிமாவில் நடிக்க வந்த போது ரொம்ப பிளாங்காக இருந்தேன்.
கட்ஸ் படத்தில் டிரையலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஸ்ருதி நாரயணன்..!#Guts #ShruthiNarayanan #BehindTalkies pic.twitter.com/R6WJij3vKu
— Behind Talkies (@BehindTalkies) April 8, 2025
இயக்குனர் பற்றி சொன்னது:
எனக்கு ஃபுல் சப்போர்ட் செய்தது ரங்கராஜன் சார் தான். என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது? என்று எனக்கு எல்லாவிதமாக ஆதரவையும் கொடுத்தார். அவருக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இது எனக்கு புது பிளாட்பார்ம். ஆனால், நான் இங்கு புது ஆளு என்று சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இங்கு இருக்கிறவர்கள் பார்த்துக் கொண்டார்கள். அதுமட்டுமில்லாமல் நான் என்ன செய்யணும் என்பதை என்னைவிட நீங்கள் தான் சார் எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி. இந்த வாய்ப்புக்கு காரணமாக இருந்த எல்லோருக்கும் நன்றி. படத்துக்கு உங்களுடைய சப்போர்ட் ரொம்ப தேவை. அதை எங்களுக்கு கொடுங்கள் என்று பேசி இருக்கிறார்.