சினிமா பிரபலமாக வாழ்வது கஷ்டமான விஷயம் - நடிகை சிம்ரன் எஸ்குளூசிவ் தகவல்

By subhashini · 10/5/2025

தன்னுடைய குடும்பம் குறித்து முதன் முதலாக மனம் திறந்து நடிகை சிம்ரன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சிம்ரன். இவர் முன்னனி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல நடிகர்களுடன் கை கோர்த்து நடித்து இருக்கிறார். சிம்ரன் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அவரது நடனம் தான். இதனால் சிம்ரனை பலரும் இடுப்பழகி என்று அழைத்து வந்தனர்.

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது சிறப்பான நடிப்பிற்கு இவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது. அந்த வகையில் தற்போது சுமார் அவர்கள் டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சசிகுமார், யோகி பாபு, ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், மீதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார்.

சிம்ரன் திரைப்பயணம்:

இலங்கை தமிழர் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டுகிறார்கள். அதோடு இந்த படம் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சிம்ரன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் அஜித்தின் நடிப்பில் வெளியாகியிருந்த குட் பேட் அக்லி படத்திலும் ஒரு கேமியா ரோலில் சிம்ரன் நடித்திருந்தார்.

சிம்ரன் பேட்டி:

குறிப்பாக, சிம்ரன் நடமாடிய தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலும் இந்த படத்தில் இடம்பெற்று இருந்தது. அந்த காட்சியெல்லாம் இணையத்தில் மிக வைரல் ஆகி இருந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது சிம்ரன் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தன் குடும்பம் பற்றி சிம்ரன் சொன்னது, குழந்தைகளுக்கு நோ சொல்வது என்பது கஷ்டமான விஷயம். அவர்களை சமூக ஊடகத்திலிருந்தும், கவனத்தை ஈர்க்கும் விஷயங்களில் இருந்தும் விலக்கி வைப்பது எளிதானது கிடையாது.

குழந்தைகள் பற்றி சொன்னது:

நான் அந்த சவால்களை எல்லாம் எதிர்கொள்கிறேன். பிரபலமாக வாழ்வதும் எளிதான விஷயமில்லை. என் குடும்பத்தில் அனைவருமே சினிமா மீது ஆர்வம் கொண்டார்கள். திரையரங்கிற்கு செல்வது, ஒன்றாக சேர்ந்து இரவில் படம் பார்ப்பது என்பது எங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். அது திகில் படமாக இருந்தாலும் சரி, நகைச்சுவை படமாக இருந்தாலும் சரி ஒன்றாக தான் சேர்ந்து பார்ப்போம். என்னுடைய பிள்ளைகளுக்கு நான் நடித்த கன்னத்தில் முத்தமிட்டாள், பிரியமானவளே படம் ரொம்ப பிடிக்கும். அவர்கள் அஜித் மற்றும் விஜய்னுடைய தீவிர ரசிகர்கள்.

சினிமா பற்றி சொன்னது:

அதேபோல் சினிமாவில் இருப்பது ஒரு கஷ்டமான வேலை தான். அதற்கு முழுக்க முழுக்க கடின உழைப்பு கொடுக்க வேண்டியது. இதற்கு மாற்று கருத்து எதுவுமே இல்லை. மக்களின் அன்பும் ஆதரவும் தேவை. மக்களினுடைய அதிர்ஷ்டம் தான் பெரும் பங்கு வகிக்கும். நானும் அதை நம்புகிறேன். ஆனால், நல்லவர்களுக்கு அதிர்ஷ்டம் வரும் என்று நினைக்கிறேன். வாழ்க்கையில் நல்ல செயல்களை செய்யும்போது தான் அது இறுதியில் பலனை கொடுக்கிறது. என்னுடைய அம்மா ரொம்ப வலிமையான பெண்மணி. அவருடைய உறுதியான மனநிலையை நான் எப்போதுமே பாராட்டுவேன், வியப்பேன். அதை நிச்சயமாக என்னுடைய குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கிறேன். முதலில் நீங்கள் நடந்து கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full