குட் பேட் அக்லி : மீண்டும் அஜித் சாருடன் சேர்ந்து நடித்தது ப்ளாஸ்ட் - நெகிழ்ச்சியில் சிம்ரன் பதிவு
குட் பாய் டெக்னி படத்தில் நடித்த தொடர்பாக சிங்கள அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வாயிலாக வருகிறது தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விடா முயற்சி’.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைபெற்றது. இந்த படம் மொத்தமாக 150 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. தற்போது நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.
குட் பேட் அக்லி படம்:
இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். மேலும், அஜித் ரசிகர்கள் தியேட்டரில் ஆடி பாடியும், பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடி இருக்கிறார்கள். ரசிகர்கள் மத்தியில் படம் வரவேற்கப்பட்டு வருகிறது. முதல் நாளில் மட்டும் இந்திய அளவில் குட் பேட் அக்லி படம் 28.5 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தில் சிம்ரன் நடனமாடிய தொட்டு தொட்டு பாடல் சுல்தானா பாடலுக்கு பிரியா வாரியார் நடனமாடி இருக்கிறார். தற்போது இந்த பாடல் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
சிம்ரன் பதிவு:
இது ஒரு பக்கம் இருக்க சிம்ரன் இந்த படத்தில் கேமியா ரோலில் நடித்து இருக்கிறார். ஏற்கனவே சிம்ரன்- அஜித் இருவரும் இணைந்து வாலி, உன்னை கொடு என்னை தருவேன் போன்ற படங்களில் எல்லாம் நடித்திருந்தார்கள். அந்த படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்ரன் அஜித்துடன் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக சோசியல் மீடியாவில் போட்ட பதிவில் சிம்ரன், கேமியோ கதாபாத்திரமாக தான் நான் படத்திற்குள் வந்தேன்.
அஜித் பற்றி சொன்னது:
படத்தில் வெளியே போகும்போது உங்களுடைய அன்பை பெற்றிருக்கிறேன் அஜித் சார். அஜித் சாருடன் மீண்டும் குட் பேட் அக்லி படத்தில் நடித்தது பிளாஸ்ட். இப்படியான ஒரு பன் பயணத்தை கொடுத்த இயக்குனர் ஆதிக்க ரவிச்சந்திரனுக்கும் படகுழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல்வேறு முன்னனி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்துவிட்ட சிம்ரன், தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார் சிம்ரன் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அவரது நடனம் தான். இதனால் சிம்ரனை பலரும் இடுப்பழகி என்று அழைத்து வந்தனர்.
சிம்ரன் குறித்த தகவல்:
சிம்ரன் நடிப்பில் வெளிவந்த பல்வேறு படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இடையில் சினிமாவில் இருந்து சிம்ரன் கொஞ்சம் பிரேக் எடுத்து இருந்தார். பின் சமீப காலமாக இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். சினிமா மட்டும் இல்லாமல் சிம்ரன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த சப்தம் படம் ரசிங்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதை அடுத்து தற்போது இவர் குட் பேட் அக்லி படத்தில் நடித்து இருக்கிறார்.