18 ஆண்டுகள் கழித்து டாப் நடிகர் படத்தில் இணைந்த சிம்ரன் - யார் படத்தில் தெரியுமா ?

By Rajkumar · 11/12/2020

தமிழ் சினிமாவின் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல்வேறு முன்னனி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்துவிட்ட சிம்ரன், தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார் சிம்ரன் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அவரது நடனம் தான். இதனால் சிம்ரனை பலரும் இடுப்பழகி என்று அழைத்து வந்தனர்.தமிழில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் நடித்த பல்வேறு படங்களுக்கு இவரது சிறப்பான நடிப்பில் இவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது.

சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லி கதாபாத்திரம் என்று நடிகை சிம்ரன் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் கமல், விஜய், அஜித், சூர்யா,சரத்குமார் என்று பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த சிம்ரன் அவரது காலகட்டத்தில் ஒரு டாப் நடிகையாகவே இருந்து வந்தார். சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் கூறப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 2 ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.

திருமணம் முடிந்து குழந்தை குட்டி என்று செட்டில் ஆன பின்னரும் தனது நடிப்பை கைவிடாமல் இருந்து வந்தார். மேலும், தனது செகண்ட் இன்னிங்ஸ்ஸை தொடர்ந்த சிம்ரன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார். அத்தோடு சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தாமல் நடித்து வருகிறார். இறுதியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை சிம்ரன், நடிகர் பிரசாந்த் படத்தில் 1 ஆண்டுகள் கழித்து இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரசாந்த்துடன் இணைந்து நடிகை சிம்ரன் நடித்த ஜோடி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து 'தமிழ்' படத்தில் நடித்து இருந்தார். தமிழ் படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் நடிகர் பிரசாந்த் நடித்து வரும் அந்தாதூண் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் சிம்ரன் இணைந்துள்ளாராம். இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

behindtalkies AMP · Quick view
View full