நிஜமாகவே உங்களுக்கு 43 வயதாகி விட்டதா? சிம்ரன் பதிவிட்ட வீடியோவை கண்டு வியந்த ரசிகர்கள்.

By Rajkumar · 18/2/2020

தமிழ் சினிமாவின் இடுப்பழகி என்ற பட்டத்துடன் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல்வேறு முன்னனி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்துவிட்ட சிம்ரன், தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார் சிம்ரன் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அவரது நடனம் தான். இதனால் சிம்ரனை பலரும் இடுப்பழகி என்று அழைத்து வந்தனர்.

https://www.youtube.com/watch?v=vseP9jg--nw

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் நடித்த பல்வேறு படங்களுக்கு இவரது சிறப்பான நடிப்பில் இவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது. சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லி கதாபாத்திரம் என்று நடிகை சிம்ரன் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் கூறப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 2 ஆண் குழந்தைகளும் பிறந்தனர். திருமணம் முடிந்து குழந்தை குட்டி என்று செட்டில் ஆன பின்னரும் தனது நடிப்பை கைவிடாமல் இருந்து வந்தார்.

மேலும், தனது செகண்ட் இன்னிங்ஸ்ஸை தொடர்ந்த சிம்ரன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார். அத்தோடு சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தாமல் நடித்து வருகிறார். இறுதியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திலும் தனது இளமை தோற்றத்தை இழக்காமல் இருந்து வந்தார் சிம்ரன். பேட்ட படத்தை தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. மேலும், விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்துள்ளார் சிம்ரன்.

சினிமாவைப் பொருத்தவரை 40 வயதை தாண்டிய நடிகைகள் பலரும் இளமை தோற்றத்தை இழந்து ஆளே மாறி விடுவார்கள். ஆனால், நதியா போன்ற ஒரு சில நடிகைகள் மட்டுமே தற்போதும் இளமையாக இருக்கிறார்கள். சமீபத்தில் சென்ற காதலர் தினத்தன்று முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட போவதாக அறிவித்திருந்தார். 

இதை தொடர்ந்து இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே உங்களுக்கு 43 வயதாகி விட்டதா..? என வாயை பிளந்து வருகிறார்கள் அந்த வீடியோ யூடியூபில் வெளியாகி ஒரு நாளில் 13 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை பெற்றுள்ளது. அந்த வீடீயோவை நீங்களே பாருங்க.

behindtalkies AMP · Quick view
View full