இரண்டாம் குழந்தைக்கு பின் ஏறிய உடல், கடின உடற் பயிற்சி மூலம் மீண்டும் ஸ்லிம் லுக்கிற்கு திரும்பியுள்ளார் சினேகா.

By Ajju · 20/5/2022

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு ரியல் லைப் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ரஜினி - லதா, அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் குயூட் தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் சினேகா பிரசன்னா ஜோடி. தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் சினேகா. தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என்று பல டாப் நடிகர்களுடன் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சினேகா இடையில் கொஞ்சம் படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டார். 2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் தான் இணைந்தார். பின் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.

இதையும் பாருங்க : கைவிடப்பட்ட சூர்யா படத்தின் கதாபாத்திரத்தை விக்ரம் படத்தில் புகுத்தி இருக்கும் லோகேஷ் - இது லோக்கியின் Multi Universe.

2020ல் பிறந்த மகள் :

சினேகா-பிரசன்னா இருவரும் இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிநேகாவிற்கு பெண் குழந்தை பிறந்து. இருந்தது . இந்த செய்தியை ஒரு வித்யாசமான புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் பிரசன்னா ‘தை மகள் பிறந்தாள்’ என்று பதிவிட்டு இருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் குட்டி ஸ்னேகா பிறந்து விட்டார் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

மகன் பெயர் மகளுக்கு :

இது ஒரு புறம் இருக்க தங்களது மகளுக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளதாக நடிகர் பிரசன்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டோம். அதனால் நாங்கள் ஆத்யா என்ற பெயரை வைக்கலாம் என்று யோசித்தோம். ஆனால். ,முதல் குழந்தை ஆண் குழந்தையாக போய்விட்டது.

உடல் எடை கூடிய சினேகா :

தற்போது என் மகளுக்கு அந்த பெயரை தாண்டி வேறு எந்த பெயரையும் யோசிக்க தோணவில்லை. எனவே, கொஞ்சம் வித்யாசமாக ஆத்யந்தா என்று வைத்துளோம். அப்படி என்றால் 'ஆதியும் அந்தமும் அற்றவள்'என்று அர்த்தம் என்று கூறி இருந்தார் பிரசன்னா. இது ஒருபுறம் இருக்க இரண்டாவது குழந்தைக்கு பின்னர் நடிகை சினேகா படு குண்டாக மாறி விட்டார். இதனால் சில காலம் சமூக வலைதளத்தில் கூட புகைப்படங்களை பதிவிடாமல் இருந்தார்.

உடற்பயிற்சி மூலம் ஸ்லிம்மான சினேகா :

இருப்பினும் இரண்டாம் குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே குறைக்க கடினமான உடற்பயிற்சிகளை செய்து வந்தார் சினேகா. இப்படி ஒரு நிலையில் உடல் எடையை குறைத்து மீண்டும் பழையபடி படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். சமீபத்தில் சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் கணிசமாக உடல் எடையை குறைத்து மீண்டும் படு ஸ்லிம் லுக்கிற்கு திரும்பியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full