தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை சோனாவை யாரும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. தமிழில் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனா. அதன் பின்னர் ஷாஜகான் வில்லன் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை சோனா. மேலும், இவர் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பட்டத்தை வென்றவர் என்பதும் குறிபிடத்தக்கது.

பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த சோனா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் ஒன்றில் , “சிலர் என்னைத் திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த வருடத்தில் நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். 12 படங்களை நிராகரித்திருக்கிறேன் பணத்தை விட நிம்மதியும் மனநிறைவும் முக்கியம் என நினைக்கிறேன்.

இதையும் பாருங்க : கடற்கரையில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த விஷாலின் காதலி – ஆமா, இவங்க திருமண கத என்னாச்சி ?

Advertisement

மேலும் எனக்கு பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமும் இல்லை. முன்பு போல் அல்லாமல் இப்போது முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். வரவிருக்கும் 2020-ம் ஆண்டு எனக்கு சினிமாவில் நல்ல கதாபாத்திரங்கள் அமையும் என்று நம்புகிறேன். இந்த வருடம் நான் சேஸிங், பரமபதம் விளையாட்டு, அசால்ட், தேடுதல், பச்ச மாங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறேன்” என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் நடிகை சோனா சிரியலிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் துவங்கப்பட்ட அபி டைலர் என்ற தொடரில் தான் நடிகை சோனா நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் ஒளிபரப்பாகவுள்ள எபிசோடுகளில் நடிகை சோனாவின் காட்சிகள் இடம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement