என்னை ஏமாத்திட்டாங்க, இரவு 1 மணிக்கு போன் செய்து மிரட்டுகிறார்கள் - திடீரென நடிகை சோனா தர்ணா போராட்டம்

By subhashini · 24/3/2025

நடிகை சோனா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெப்சி அமைப்பு முன்பு நடிகை சோனா அவர்கள் தர்ணா போராட்டம் செய்கிறார். இதற்கு காரணம், சோனா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஸ்மோக் படத்தினுடைய காட்சி வீடியோவை தராமல் இழுத்தடிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தான் இந்த போராட்டத்தை நடத்தி இருக்கிறார். இந்த நிலையில் இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில் சோனா, எல்லோருக்கும் வணக்கம்.

https://www.youtube.com/watch?v=VgnK0Q6U2-o

நான் சோனா பேசுகிறேன். இந்த சினிமாத்துறைக்குள் நுழைந்து 25 வருடம் ஆகிவிட்டது. நான் படம் நடிக்கிறேன், தயாரிக்கிறேன். என்னென்னமோ பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால், பத்து வருஷமாக என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். அதற்கு காரணம், ஒரே ஒருவாட்டி நான் வாயை திறந்து என் மேல ஒருத்தன் கைய வச்சுட்டான் என்று சொல்லிவிட்டேன். அதுக்கு இத்தனை வருடமாக என்னை உட்கார வைத்து விட்டார்கள். இதுதான் நடக்கும் என்று எனக்கும் தெரியும்.

சோனா போராட்டம்:

அதனால் தான் நான் ஒதுங்கி விட்டேன். நான் ஒரு படத்தை இயக்கி ஓடிடியில் வெளியிட ஒப்பந்தம் போட்டேன். பூஜை போட்ட நாளிலிருந்து இப்போது வரை பிரச்சனையாக தான் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு வழியாக எல்லா பிரச்சினையும் முடிந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். ஒரு மேனேஜரை வேலையில் வைத்திருந்தோம். காசை வாங்கிக் கொண்டு அந்த மேனேஜர் ஏமாற்றி விட்டார். என்னுடைய படத்தின் ஹார்ட் டிஸ்கை கேமரா யூனிட் இடம் கொடுத்து விட்டார்.

போராட்டத்திற்கு காரணம்:

இது தொடர்பாக நான் பெப்சி அமைப்பிடம் புகார் அளித்தேன். அவர்கள் பிரச்சினையை முடித்து தருவதாக சொன்னார்கள். ஆனால், அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்குமே காசு தரவேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த பிரச்சனை தாண்டி வந்த பிறகு தற்போது என்னுடைய ஒரு ஹார்ட் டிஸ்கை வாங்கிக் கொண்டு தர மறுக்கிறார்கள். இரவு ஒரு மணிக்கு எனக்கு போன் செய்து மிரட்டுகிறார்கள். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை பெப்சி அலுவலகத்தில் இருந்து போராடுவேன் என்று வேதனையில் பேசி இருக்கிறார்.

சோனா திரைப் பயணம் :

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து இருந்தவர் சோனா. இவர் தமிழில் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் என்ற வெளிவந்த சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
பின் இவர் சில காலம் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து இருக்கிறார். இடையில் சில ஆண்டுகள் இவர் டங்களிலிருந்தும் விலகி இருந்தார்.

சோனா குறித்த தகவல்:

சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த அபி டெய்லர் என்ற சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். தற்போது சோனா ஸ்மோக் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடரை சோனாவே எழுதி இயக்கி இருக்கிறார். சொல்லப்போனால், இந்த தொடரின் மூலம் இவர் இயக்குனராகவும் அறிமுகமாக இருக்கிறார். இவர் தன்னுடைய வாழ்வில் நடந்த பல சம்பவங்களை கதையாக எழுதி இந்த வெப் தொடரை இயக்கி வருகிறார். இந்த வெப் சீரிஸ் எட்டு எபிசோடுகளாக உருவாகி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full