நான் பண்ண அந்த தப்பால தான் என்னால கல்யாணமே பண்ண முடியல - மேடையில் கலக்கத்துடன் கூறிய சோனா

By subhashini · 16/10/2023

இதனால் தான் எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை சோனா அளித்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து இருந்தவர் சோனா. தமிழில் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனா.

அதன் பின்னர் இவர் ஷாஜகான், வில்லன் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பின் இவர் சில காலம் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். மேலும், இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து இருக்கிறார். அதிலும் இவர் வடிவேலு, விவேக் போன்ற பல நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நடிகை சோனா அவர்கள் வெங்கட் பிரபுவின் உதவியாளர் இயக்கிய கனிமொழி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.

சோனா நடித்த சீரியல்கள்:

அந்த படம் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியடைவில்லை. இதனால் சோனாவிற்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் தான் ஏற்பட்டது. அதற்குப் பிறகு சோனா படங்களை தயாரிக்காமல் நடித்து மட்டும் வந்தார். இடையில் சில ஆண்டுகள் இவர் டங்களிலிருந்தும் விலகி இருந்தார். மேலும், சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் கலர்ஸ்
தமிழில் ஒளிபரப்பாகி இருந்த அபி டெய்லர் என்ற சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். அதனை அடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மாரி என்ற சீரியலும் வில்லியாக நடித்திருந்தார்.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

ஸ்மோக் படம்:

ஆனால், திடீரென்று அந்த சீரியலில் இருந்து சில பிரச்சனையின் காரணமாக சோனா விலகிவிட்டார். இந்த நிலையில் தற்போது சோனா ஸ்மோக் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடரை சோனாவே எழுதி இயக்கி இருக்கிறார். சொல்லப்போனால், இந்த தொடரின் மூலம் இவர் இயக்குனராகவும் அறிமுகமாக இருக்கிறார். இவர் தன்னுடைய வாழ்வில் நடந்த பல சம்பவங்களை கதையாக எழுதி இந்த வெப் தொடரை உருவாக்கி இருக்கிறார். இந்நிலையில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றிருக்கிறது.

சோனா அளித்த பேட்டி:

இதில் கலந்துகொண்ட சோனா, ஸ்மோக் வெப் தொடர் என்னுடைய வாழ்க்கையில் நடந்த 99 சதவீதங்களை அப்படியே கொண்டிருக்கின்றது. நான் என் வாழ்க்கையில் நிறைய சந்தோஷம், வலிகள், வேதனைகள், ஏமாற்றங்களை பார்த்திருக்கிறேன். என்னை எல்லோரும் கவர்ச்சி நடிகை என்று அடையாளம் படுத்தி விட்டார்கள். அது மிகப்பெரிய அளவில் என்னை பாதித்தது. பலருமே வெளிப்படையாக இவர் கவர்ச்சி நடிகை தானே, திரைப்படத்தில் நடிப்பவள் தானே இப்படித்தான் இருப்பாள் என்றெல்லாம் எனக்கு முத்திரை பதித்து விட்டார்கள்.

திருமணம் குறித்து சொன்னது:

நானும் ஒரு சாதாரண பெண்தான். எனக்கும் சமைக்க, வீட்டு வேலை அனைத்தும் செய்ய தெரியும். இருந்தாலும், எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதற்கு காரணம் என் மீது குத்தப்பட்ட இந்த கவர்ச்சி நடிகை பெயர் தான். இந்த பெயரை மாற்ற நான் பல முயற்சிகள் செய்தேன். இதனால் நான் சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தில் கூட நடித்து இருந்தாலும் அந்த பெயர் மாறவில்லை. அது மட்டும் இல்லாமல் சில சமயங்களில் ஏன் சினிமாவிற்கு வந்தேன் என்றெல்லாம் யோசித்திருந்தேன். இதனால் சில ஆண்டுகள் மனமடைந்து சினிமாவில் இருந்தும் விலகி இருந்தேன். இருந்தாலும் சினிமா ஒரு மாயை. அது எப்படியும் மீண்டும் என்னை இங்கு இழுத்து வந்து விட்டது என்று நிறைய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full