உடல் எடை குறைத்து மீண்டும் form-க்கு வந்த நடிகை சோனியா அகர்வால்.

By Rajkumar · 22/8/2020

தமிழ் சினிமாவில் 90ஸ் மற்றும் 2k ரசிகர்களால் மறக்க முடியாத நடிகைகளில் நடிகை சோனியா அகர்வாலும் ஒருவர். நடிகை சோனியா அகர்வால் சண்டிகாரை சேர்த்தவர். மார்ச் 28 1982ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு தற்போது 35 வயதாகிறது. அங்கு உள்ள பாரம்பரிய பஞ்சாபி குடும்பத்தை சார்ந்தவர். மாடலிங்கில் கொடிகட்ட பறந்த அவரை இயக்குனர் செல்வராகவன் அழைத்து வந்து தன்னுடைய காதல் கொண்டேன் படத்தில் அவருக்கு அறிமுகம் கொடுத்தார்.

காதல் கொண்டேன் படத்திற்கு பின்னர் கோவில்,மதுரை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.தமிழில் வெளியான காதல் கொண்டேன் படம் இருக்கு ஒரு ப்ரேக் கொடுத்தது. அதன் பின்னர் முன்னணி நடிகையாக இவர், சிம்புவுடன் கோவில், விஜயுடன் மதுர, பின்னர் கோவில், ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டு பயலே உள்ளிட்ட ஹிட்டான படங்களில் நடித்தார்.

பெரும்பாலும் தமிழ் படங்களில் மட்டுமே நடித்த சோனியா, தெலுங்கிலும் ஒருசில படங்களில் நடித்தார்.பின்னர், 2006ல் இயக்குனர் செல்வராகவனுடன் ஏற்பட்ட காதலினால் அவருடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2010வரை மட்டுமே நீடித்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவகாரத்து பெற்றுக்கொண்டனர். 

இவருக்குஇருந்த குடிப்பழக்கத்தால் தான் இவரை செல்வராகவன் பிரிந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.விவாகரத்திற்கு பின்னரும் நடிகை சோனியா அகர்வால் தமிழ் மலையாளம் கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் தொலைக்காட்சிகளில் மல்லி, நாணல் போன்ற தொடர்களில் கூட நடித்திருக்கிறார்.இடையில் உடல் எடை கூடி சற்று பருமனாக இருந்த சோனியாஅகர்வால் உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைக்க தொடங்கினார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full