அவர் இருந்து நடத்த வேண்டிய கல்யாணம், ஆனால் - பிக் பாஸ் அமித் பார்கவ் மனைவி ஸ்ரீ ரஞ்சனி எமோஷனல்

By subhashini · 2/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 58 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இந்த நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து இருப்பதால் போட்டியாளர்கள் மத்தியில் ஆட்டம் சூடு பிடித்து இருக்கிறது.

பிக் பாஸ் அமித்:

மேலும், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் தான் அமித் பார்கவ். இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பே சீரியல், படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். அது மட்டும் இல்லாமல் தொகுப்பாளனி ஸ்ரீ ரஞ்சனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் அமித் பார்கவின் சொந்த தம்பியின் திருமணம் நேற்று நடைபெற்றிருக்கிறது. இவர் போபாலை சேர்ந்த ஒரு பெண்ணை தான் திருமணம் செய்து இருக்கிறார்.

ஸ்ரீரஞ்சனி பேட்டி:

அமித் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் தன்னுடைய சொந்த தம்பியின் திருமணத்தில் கூட கலந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. இது தொடர்பாக அமித்தின் மனைவி ஸ்ரீரஞ்சனி அளித்த பேட்டியில், பிக் பாஸ் வாய்ப்பு வந்த போது இந்த திருமணம் உறுதியாகிவிட்டது. சினிமா, டிவி மாதிரியான மீடியாவில் வாய்ப்பு வரும்போது தவற விடக்கூடாது என்பதால் அமித் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். இருந்தாலும் நேற்று மட்டுமில்லை இன்னும் இரண்டு மூன்று நாள் அவர் மனது இந்த கல்யாணத்தில் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அமித் பற்றி சொன்னது:

வீட்டில் எல்லோருக்குமே கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் பொறுத்துக் கொண்டோம். அந்த வீட்டிலேயும் சரி வெளியிலையும் சரி இதுவரை அவருக்கு கெட்ட பெயர் பெரிதாக வரலை என்று தான் நினைக்கிறோம். இப்படியே அமித் விளையாண்டால் போதும் என்று நினைக்கிறேன். பிக் பாஸில் கலந்து கொள்ளும் எல்லோருக்குமே டைட்டில் வாங்கணும் என்று ஆசை இருக்கத்தான் செய்யும். இவரை பொறுத்தவரை 100 நாளும் அந்த வீட்டில் இருப்பார் என்று நம்புகிறேன். மத்ததெல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் கடவுள் கையில்தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full