ரஜினிக்காக 7 நாட்கள் சாப்பிடாமல் இருந்த ஸ்ரீதேவி, எதற்காக தெரியுமா?- சுவாரசியமான தகவல் இதோ
சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக நடிகர் ஸ்ரீதேவி ஏழு நாள் சாப்பிடாமல் விரதம் இருந்த சுவாரசியமான தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. இந்திய சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80's காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது.
அதேபோல், நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடிகை ஸ்ரீதேவிவுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகளாக இவர்கள் இருந்து வந்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்த ஜோடி தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் இணைந்து நடித்து ரசிகர்களின் அபிமான ஜோடியாக இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்கள்.
ரஜினி-ஸ்ரீதேவி:
மூன்று முடிச்சு படத்தில் தொடங்கிய இவர்களது பயணம் தொடர்ந்து வணக்கத்திற்குரிய காதலியே, நான் அடிமை இல்லை, அடுத்த வாரிசு, 16 வயதினிலே, போக்கிரி ராஜா, ஜானி, ப்ரியா என இவர்கள் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்கள். சினிமாவைக் கடந்து இவர்கள் இருவரும் நல்ல நட்புடன் இருந்துள்ளார்கள். நடிகை ஸ்ரீதேவி மீது இருந்த அளவு கடந்த நட்பினால் அவரை திருமணம் செய்யவும் ரஜினிகாந்த் நினைத்ததாக மறைந்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
ஸ்ரீதேவியை திருமணம் செய்ய நினைத்த ரஜினி:
அதாவது, ஸ்ரீதேவி வீட்டுக்கு கிரக பிரவேசத்திற்கு ரஜினி சென்றபோது கரண்ட் கட் ஆகி இருள் சூழ்ந்துள்ளது. இதை அபசகுனமாக கருதி, நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்வதற்கு பெண் கேட்கும் முடிவை கைவிட்ட ரஜினிகாந்த், அவரிடம் சொல்லாமலேயே வீட்டை விட்டும் வெளியேறி இருக்கிறார். அதற்குப் பிறகு ஸ்ரீதேவியுடன் நட்பாக பழகத் தொடங்கினார் ரஜினிகாந்த் என்று மறைந்த இயக்குனர் பாலச்சந்தர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ரஜினிக்காக உண்ணாவிரதம்:
அதேபோல், கடந்த 2011 ஆம் ஆண்டு 'ராணா' படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிங்கப்பூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று இருந்தார். ரஜினிகாந்த் உடல் நலம் பாதிப்பு பற்றி தகவலை அறிந்த நடிகை ஸ்ரீதேவி, அவருக்காக சீரடி சாய் பாபாவுக்கு 7 நாட்கள் உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.
ரஜினியின் உடல்நலம் தேற வேண்டுதல்:
அது மட்டும் இல்லாமல் புணேவில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்கும் சென்ற நடிகர் ஸ்ரீதேவி, ரஜினியின் உடல் நலம் தேறி வரவேண்டும் என வேண்டுதல் நடத்தியுள்ளார். அந்த நேரத்தில் ஸ்ரீதேவி மட்டுமல்லாமல் பல்வேறு திரைப்படங்களும், கோடான கோடி ரஜினியின் ரசிகர்களும் அவர் உடல்நலம் பெற வேண்டுமென்று பிரார்த்தனை நடத்தினர். அந்த காலகட்டத்தில் சுமார் 15 நாட்களுக்கு மேல் ரஜினிகாந்த் தீவிர சிகிச்சை பெற்று இருந்தார். பின்னர் நலமுடன் வீடு திரும்பி சினிமாக்களில் நடிக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.