டைட் ஆடையில் ஜிம் selfie புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரீதிவ்யா.! இவங்களும் இப்படி இறங்கிட்டாங்களா.!
சினிமாவில் நடிகர்களை பொருத்தவரை உடல் அமைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஹீரோக்கள் என்றால் சிக்ஸ் பேக் ஹீரோயின்கள் என்றால் மிகவும் ஒல்லியான உடல்வாகு என்பது தான் தற்போது இருக்கும் திரையுலகில் ஒரு தாரக மந்திரமாக இருந்து வருகிறது. இதனால் நடிகர்கள் அனைவரும் தங்களது உடல் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளை செய்வது வழக்கம்.
அதிலும் கதாநாயகிக்கு உடல் அமைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உடல் எடை கூடியதால் சினிமாவிலிருந்து பீல்ட் அவுட் ஆன நடிகைகள் பலர் உள்ளனர். ஆனால், அழகான உடல் அமைப்பு இருந்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் நடிகை ஸ்ரீதிவ்யா.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அந்த படத்திற்கு பின்னர் தமிழில் பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
பார்ப்பதற்கு மிகவும் சின்ன பெண் போல இருக்கும் இவரது தோற்றதால் என்னவோ இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவா நடித்த 'சங்கிலி புங்கிலி கதவ தோற' படத்தில் நடித்திருந்தார். தற்போது இரண்டு வருடங்களுக்கு பின்னர் அதர்வாவுடன் 'ஒத்தைக் ஒத்த' என்ற படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார்.
தற்போது கதாநாயகிகள் அனைவரும் ஒல்லியான உடல் அமைப்பை வைத்து வருகின்றனர்.அதனால் தானும் ஒல்லியாக மாற வேண்டும் என்று கடுமையாக உடற்பயிற்சியை செய்து வருகிறார் அம்மணி. இதனால் சமீபத்தில் ஜிம்மில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ரீதிவ்யா.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.