வனிதா சொன்னால் எல்லாம் நடக்குமா.! அப்பா.! பங்கமாக கலாய்த்த கமல் பட நடிகை.!

By Rajkumar · 16/8/2019

கடந்த சில தினங்களாக காதலும் கடலையுமாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவின் என்ட்ரிக்கு பின்னர் தலைகீழாக மாறிவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சிறப்பு விருந்தினராகச் சென்று உள்ள வனிதா தான் மற்ற போட்டியாளர்கள் மத்தியில் நாசுக்காக சண்டையை கிளப்பி விட்டுள்ளார். இதனால் பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் நடந்து வருகிறது.

https://twitter.com/sripriya/status/1162047826701852672

அதே போல வனிதா சென்ற நாளில் இருந்தே வனிதா தான் பிக் பாஸ் வீட்டையே கட்டுப்பாட்டில் வைத்து வருவது போல இருந்து வருகிறார். அதிலும் இவர் தான் தற்போது பிக் பாசிர்கே ஆர்டர் போட்டு வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போது நான் அப்புறம் குறும் படம் போட்டு காண்பிக்க சொல்வேன் என்று கூறியிருந்தார்.

அதே போல சிறையில் இருந்த அபிராமி, தன்னால் உடம்பிற்கு முடியவில்லை என்னை தயவு செய்து வெளியில் அனுப்புங்கள் என்று கூறியிருந்தார். ஆனால், அதற்கு பிக் பாஸ் எந்த பதிலையும் அளிக்கவில்லை. அப்போது வனிதா, அபிராமியிடம் நான் சொல்கிறேன் நீ வெளியே வா என்று உத்தரவு போட்டார். அதன் பின்னர் வனிதாவுடன் சென்ற லாஸ்லியா சிறையின் கதவை திறந்தார்.

இப்படி பிக் பாஸிற்கே ஆர்டர் செய்து வரும் வனிதாவை பங்கமாக கலாய்த்துள்ளார், பிரபல நடிகை ஸ்ரீப்ரியா. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதில் Watching BB...I have a doubt வனிதா அவர்கள் சொன்னால் BB வீட்டு கதவு திரந்து வைக்கப்படுமா?வனிதா அவர்கள் சொன்னால் குறும்படம் போடப்படுமா?அப்பா.... என ஸ்ரீப்ரியா விமர்சித்துள்ளார்  

Tamil Behind Talkies AMP · Quick view
View full