லாக் டவுன்.சரக்கு அடித்துக் கொண்டே டிவி பார்க்கும் சர்ச்சை நாயகி. யாருனு தெரியுதா?

By Rajkumar · 24/4/2020

உலகமெங்கும் தற்போது 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், '144' போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

'கொரோனா' பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல முன்னணி நடிகர்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

அனைத்து திரையுலக பிரபலங்ளும் ஒரு ரூட்டில் சென்று கொண்டிருந்தால், அதே போல் பிரபல சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டியும் இருப்பாரா என்ன?.. அவரது ரூட்டே தனி.. தினமும் மற்றவர்களை கெட்ட வார்த்தையில் திட்டி குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார் ஸ்ரீ ரெட்டி. இதில் அவ்வப்போது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பக்கத்தில் செம ஹாட்டான தனது ஸ்டில்ஸ் மற்றும் டிக் டாக் வீடியோக்களை ஷேர் செய்த வண்ணமுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

சமீபத்தில், நடிகை ஸ்ரீ ரெட்டி தனது அதிகாரப்பூர்வமான ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட் செய்திருக்கிறார். அப்போது அவர் பேசுகையில் "தனக்கு ரொம்பவும் பிடித்தவர்களுடன் படுக்கையை பகிர்வேன்" என்று தெரிவித்திருக்கிறார். '144' போடப்பட்டுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருக்கிறது.

தற்போது, நடிகை ஸ்ரீ ரெட்டி சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பக்கத்தில் இரண்டு புதிய புகைப்படங்களை ஷேர் செய்திருக்கிறார். அதில் ஒரு புகைப்படத்தில் ஸ்ரீ ரெட்டி தனது கால்களை அங்கிருக்கும் டேபிளில் நீட்டியபடி அமர்ந்திருக்கிறார். அவர் அருகில் டிவி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த புகைப்படத்தில் ஸ்ரீ ரெட்டியின் காலுக்கு அருகில் ஒரு சரக்கு பாட்டிலும் இருக்கிறது. இன்னொரு புகைப்படத்தில் ரெட் லேபில் என்ற சரக்கை கையில் வைத்து சிரித்தபடி போஸ் கொடுத்திருக்கிறார் ஸ்ரீ ரெட்டி. இவ்விரண்டு புகைப்படங்களையும் பார்த்த ரசிகர்கள், இந்த லாக் டவுன் டைமில் உங்களுக்கு மட்டும் எப்படி தான் சரக்கு கிடைக்கிறது என்று கமென்ட்ஸ் போட்ட வண்ணமுள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full