கோலாகலமாக நடந்த நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகாவின் வளைகாப்பு - குவியும் வாழ்த்துக்கள்
நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகாவுக்கு எளிமையாக வளைகாப்பு நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ஸ்ரித்திகா. இவர் சன் டிவியில் 2010 ஆம் ஆண்டு திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட “நாதஸ்வரம்” சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலமாகி தனெக்கென ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார்.
இந்த சீரியலை தொடர்ந்து இவர் மாமியார் தேவை, வைதேகி, உறவுகள் சங்கமம், முகூர்த்தம், கலசம், கோகுலத்தில் சீதை, உயிர், கல்யாண பரிசு, அழகு, மகராசி போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலம் ஆகி இருக்கிறார். மேலும், இவர் சீரியல் நடிகை மட்டும் இல்லாமல் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரை படங்களில் நடிகை ஸ்ரிதிகா நடித்து இருந்தார்.
ஸ்ரித்திகா குறித்த தகவல்:
அதிலும், 2008 ஆம் ஆண்டு வெளியான ‘மகேஷ், சரண்யா மற்றும் பலர்’ என்ற படத்தின் மூலம் தான் இவர் வெள்ளித்திரையில் பிரபலமானார். பின் இவர் வெண்ணிலா கபடிகுழு, தனுஷின் வேங்கை, பாலு தம்பி மனசிலே, மதுரை To தேனீ உள்ளிட்ட ஒரு பல படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவருக்கு சினிமாவில் பட அமைப்புகள் சரியாக அமையவில்லை என்ற உடன் மீண்டும் சீரியல் நோக்கியே வந்து விட்டார். அதோடு விளம்பர படங்களிலும் கூட நடித்து இருந்தார்.
ஸ்ரித்திகா திருமணம்:
இதனிடையே கடந்த 2019 ஆண்டு நடிகை ஸ்ரிதிகாவுக்கு, சதீஸ் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுடையது அரேஞ்ச் மேரேஜ். இவர்களின் திருமண புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. திருமணத்திற்கு பிறகும் ஸ்ரித்திகா சீரியல்களில் நடித்து வந்தார். மேலும், இவர் தெலுங்கு சீரியலில் நடித்து இருக்கிறார். இதை அடுத்து இவர் திருமணம் ஆகி இரண்டு வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
ஸ்ரித்திகா இரண்டாவது திருமணம்:
இதை அடுத்து நடிகை ஸ்ரித்திகா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர் ‘மகராசி’ சீரியலில் தன்னுடன் நடித்த ஆர்யன் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே தங்களுடைய முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று கடந்த ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டார்கள்.
https://www.youtube.com/watch?v=zFCiF53p5gw
ஸ்ரித்திகா வளைகாப்பு:
இதை அடுத்து கடந்த மாதம் ஸ்ரித்திகா கர்ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ஸ்ரித்திகா எளிமையாக வளைகாப்பு நடத்திருக்கிறார்கள். ஸ்ரித்திகா வளைகாப்பிற்கு சன் டிவியின் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.