பிரபல யூடியூபரை மணக்கும் நடிகை சுனைனா, வெளியான உண்மை தகவல்- யார் தெரியுமா?
பிரபல யூடியூபர் உடன் நடிகை சுனைனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருப்பவர் சுனைனா. தமிழில் நடிகர் நகுல் நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான 'காதலில் விழுந்தேன்' என்ற படம் மூலம் தான் அறிமுகமாகி இருந்தார் சுனைனா.
இதனை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக சினிமாவில் வலம் வர முடியவில்லை. பின் இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளிவந்த “சில்லுக் கருப்பட்டி” என்ற படத்தில் சுனைனா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவருடைய கதாபாத்திரத்தை பார்த்து பலரும் பாராட்டி இருந்தார்கள்.
சுனைனா திரைப்பயணம்:
அதை தொடர்ந்து இவர் 'ட்ரிப்' படத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. பின் இவர் எரியும் கண்ணாடி, விஷாலின் லத்தி, ரெஜினா போன்ற படங்களில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. மேலும் இவர் படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
சுனைனா புகைப்படம்:
அந்த வகையில் சமீபத்தில் 'இன்ஸ்பெக்டர் ரிஷி' என்ற வெப்சீரிஸில் சுனைனா நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த மாதம் ` இன்ஸ்டாவில், சுனைனா ஒருவருடன் கைகோர்த்து இருக்கிறார். இதை பார்த்து பலருமே உங்களுக்கு திருமணமா? உங்களுடைய காதலன் யார்? என்றெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது இது தொடர்பாக சுனைனா பதிவு போட்டிருக்கிறார். அதில் அவர், எனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது.
சுனைனா நிச்சயதார்த்தம்:
நாங்கள் மோதிரம் மாத்திக் கொண்டோம். கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. அதை விரைவில் தெரிவிப்போம். எனக்கு வாழ்த்து சொல்லிய அனைவருக்குமே நன்றி. என்னுடைய நிச்சயதார்த்தம் சந்தோஷமாகவும் சிறப்பாகவும் எளிமையாகவும் முடிவடைந்தது என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் சுனைனா திருமணம் செய்யும் நபர் யார் என்று இணையத்தில் தேடி இருந்தார்கள். பின் இவர் பிரபல 'யூடியூபர் காலித் அல் அமெரி' என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார்.
காலித் அல் அமெரி குறித்த தகவல்:
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தும் நடந்தது. இவர் சலமா முஹம்மது என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார். ஆறு மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு விவாகரத்து ஆனது. சமீபத்தில் தான் சுனைனா- காலித் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக இருவருமே சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.