தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ள சன்னி லியோன் - அதுவும் இந்த காமெடி நடிகர் படத்தில்.

By Rajkumar · 21/4/2021

ஹாலிவுட்டில் பாலியல் ஆபாச படங்களில் நடித்து பின்னர் திரைப்படங்களில் நடிகையாக மாறியவர் நடிகை சன்னி லியோன். தற்போது ஹிந்தி திரையுலகின் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு டேனியல் வெபர் என்ற கணவர் இருக்கிறார்.ஆபாச நடிகையாக இருந்தாலும் இவரை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். திருமணம் ஆன பின்னர் இரண்டு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், தற்போது தமிழ், மலையாளம் என்று பல படங்களில் நடித்து வருகிறார்.

முன்னர் பார்ன் எனப்படும் நீலப்படங்களில் நடித்து வந்த அவர் பாலிவுட்டில் அறிமுகமாகி தற்போது அங்கு முன்னணி நடிகையாகவும் மாறிவிட்டார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதன் பின்னர் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி படத்திலும் கமிட் ஆகி இருந்தார். மேலும், தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் சன்னி.

மேலும், தென்னிந்திய சினிமாவிலும் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறார். இதற்காக தமிழில் பொட்டு வடிவுடையான் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். ஆனால் இந்த படத்திற்கு அவர் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆம், அதிகம் தான், புதிய நடிகையாக வரும் அவர் முதலில் ஒரு கோடி ரூபாய் கேட்டு பின்னர் தமிழ் சினிமா என்பதால் 80 லட்சத்திற்கு ஓகே சொல்லியுள்ளார்.

https://twitter.com/actorsathish/status/1384140649729986568

இப்படி ஒரு நிலையில் நடிகை சன்னி லியோன் தமிழில் ஒரு புதிய ஹாரர் காமெடி படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் அவருடன் இணைந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் சதீஷ் நடிக்க இருக்கிறார், அந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே நடிகர் சதீஷ் ஹீரோவாக ஒரு படத்தில் கமிட் ஆகியுளளார். அந்த படத்தில் குக்கு வித் கோமாளி பவித்ரா நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full