யுனிவர்சல் அழகி(பிரபஞ்ச அழகி) என்ற பட்டத்தை 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவிற்கு வாங்கி தந்தவர் சுஷ்மிதா சென். அதற்கு முன்பு இவர் மிஸ் இந்தியா பட்டம் வென்றார். இப்போட்டியில் ஐஸ்வர்யா ராயைத் தோற்கடித்தார். நடிகை சுஷ்மிதா சென் அவர்கள் பெங்காலி குடும்பத்தை சேர்ந்தவர். தன்னுடைய 18 வயதில் அழகி பட்டம் பெற்றவர். இதற்கு பிறகு தான் இவர் சினிமா உலகில் நடிக்க ஆரம்பித்தார். இவர் 1996 ஆம் ஆண்டு தஸ்தக் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்தப் படம் மிகப் பெரிய அளவிற்கு வெற்றியை கொடுத்தது. அதற்கு பிறகு இவருக்கு தமிழில் படங்கள் சரியாக அமையவில்லை என்றவுடன் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். பின் பாலிவுட்டில் நடிகை சுஸ்மிதா சென் அவர்கள் நிறைய படங்களில் நடித்தார். மேலும், இவர் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார். இவர் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement

இந்நிலையில் சுஷ்மிதா சென் அவர்கள் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுபவத்தை பிரபல தொலைக்காட்சியில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, அழகிப் போட்டிகளில் பங்கேற்பவர்கள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த உடைகளை அதுவும் ஃபேஷன் டிசைனரின் உதவியுடன் வாங்கி அணிந்தார்கள்.

ஆனால், நான் மிஸ் இந்தியா இறுதிச்சுற்றுக்கு செல்லும்போது அணிந்த கவுன் உடை விலை குறைந்தது. அதை நான் தில்லி சரோஜினி நகர் மார்க்கெட்டில் வாங்கினேன். பின் துணியை டெய்லர் இடம் கொடுத்து எனக்கு ஏற்றவாறு தைத்தேன். ஏன்னா, நாங்கள் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஃபேஷன் டிசைனர் வாங்க சொல்லும் உடைகளை வாங்க என்னிடம் பணம் இல்லை.

Advertisement

மேலும், எனக்கு நான்கு உடைகள் தேவைப்பட்டன. இந்தச் சூழலில் என் அம்மா என்னிடம் சொன்னது, யாரும் நீ என்ன அணிந்து வருகிறாய் என்று எல்லாம் பார்க்க மாட்டார்கள். உன்னைத் தான் அவர்கள் பார்ப்பார்கள் என்று தைரியம் கொடுத்தார். அதற்கு பின் தான் நான் தில்லி சரோஜினி நகர் மார்க்கெட்டில் துணிகளை வாங்கினேன்.

Advertisement

அருகே ஒரு டெய்லர் இருந்தார். மார்க்கெட்டில் வாங்கி வந்த துணிகளை எல்லாம் அவரிடம் கொடுத்து எனக்கு ஏற்றவாறு நன்குத் தைத்துக் கொடுத்தார். அதோடு மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற போது நான் அணிந்திருந்த கவுனை அவர் தான் தைத்துக் கொடுத்தார். அழகிப் போட்டியை வெல்ல பணம் முக்கியமல்லை லட்சியமும்,நம்பிக்கையும் முக்கியம் என்று கூறினார் சுஷ்மிதா சென். இப்படி இவர் அளித்த இந்தப் பேட்டியின் விடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

Advertisement