ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது வெறும் கூச்சல், எப்போதும் நான் எதிரானவள்- சொர்ணமால்யா சொன்ன தகவல்

By subhashini · 10/8/2024

90 காலகட்டத்தில் இளசுகளின் ஃபேவரட் விஜேவாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்வர்ணமால்யா. இவர் தனது 3 வயது முதல் பரதம் முறையாக கற்று தன் 17 வயதில் பரதத்திற்கான 'யுவ கலா பாரதி' என்ற விருதினை பெற்றவர்.அதற்கு பிறகு இவர் பல டீவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருந்தார். அதன் பின் மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே' என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். அதன் பின் சில ஆண்டுகள் இவர் படங்களில் நடிக்காமல் பிரேக் எடுத்து கொண்டார்.

இடையில் இவர் சீரியல்கள் நடித்து இருந்தார். தற்போது இவர் சினிமா துறையை விட்டு முழுவதும் ஒதுங்கி பரத நாட்டிய பள்ளியை ஆரம்பித்து பல குழந்தைகளுக்கு பரதம் கற்றுத்தந்து வருகிறார். மீண்டும் இவர் சீரியல், சினிமாகளில் நடிப்பாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் எழுத்து, பயணம், கலை, கலாச்சார ஆராய்ச்சி என்று பல கலைகளில் பிஸியாக பயணித்துக் கொண்டிருக்கிறார் சொர்ணமால்யா. அந்த வகையில் இவர் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களினுடைய கலை, கலாச்சாரத்தை போற்றி வளர்ப்பதற்கு Textures of Traditions என்ற ஒரு அமைப்பை நிறுவியிருக்கிறார்.

ஸ்வர்ணமால்யா பேட்டி :

இதன் மூலம் இவர் இந்தியாவின் ஒவ்வொரு கலை நிகழ்ச்சிகளை நடத்தி சம்பந்தப்பட்ட கலைஞருடைய வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவியும் வருகிறார். இதை இவர் சில ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி இருந்தார். பின்வரும் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சியின் உடைய அடுத்த சீசனை நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் சொர்ணமால்யா, சென்னை சங்கம் நிகழ்ச்சியை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளில் இருந்து அந்தந்த பகுதிகளில் பிரபலமான கலைகளை ஒரே மேடையில் நடத்தி காட்டுவார்கள்.

Textures Traditions குறித்த தகவல் :

இதை கனிமொழி அக்கா தான் அறிமுகப்படுத்தி இருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சி என்னை ரொம்பவே ஈர்த்தது. சென்னையில் இந்த நிகழ்ச்சி நடந்த போது எல்லாரும் ஒவ்வொரு இடமா தேடிப்போய் பார்த்து ரசித்து ஒரு மாநிலத்திற்குள்ளே இவ்வளவு கலைகள் இருக்கிறது என்றால், பல மாநிலங்களுக்கு பல கலாச்சாரங்கள் இருக்கிறது. பலதரப்பட்ட பண்பாட்டை கொண்ட இந்தியா முழுக்க இது மாதிரியான நிகழ்ச்சிகள் நடந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. சின்னதொரு முயற்சியாக இருந்தாலும் அதை நாம் தான் செய்ய வேண்டும் என்று அப்படி உருவாக்குனது தான் Textures of Tradition.

இந்திய கலை குறித்து சொன்னது :

இதற்கு என்னுடைய நண்பர்கள் சிலர் உதவியாக இருக்கிறார்கள். நல்ல படியாக இதற்கான வேலைகளும் சென்று கொண்டிருக்கிறது. இதுக்காக நானும், என்னுடைய குழுவும் தமிழ்நாடு தாண்டி இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் பயணித்தும், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் பயணித்தோம். இதனைத்தொடர்ந்து பலதரப்பட்ட மக்களையும், கலைஞர்களையும் சந்தித்து எங்களுடைய ஐடியாவை சொன்னோம். அவர்களும் பாராட்டி இருந்தார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளின் கலைகளை ஒரே மேடையில் அரங்கேற்றம் செய்வது மட்டும் இல்லாமல் அந்த கலைஞர்களுடைய வாழ்க்கை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறோம். கலைப் பொருள்களை தயாரித்து அந்த பொருள்களை விற்கும் ஒரு மையமாகவும் எங்கள் மேடையை பயன்படுத்திக்கலாம் என்று இருக்கிறோம்.

இந்தியா பன்முகம் தன்மை கொண்டது:

இந்த நிகழ்ச்சியினுடைய இரண்டாவது சீசன் குறித்த அறிவிப்பை விரைவில் கூறப்படும். இந்த விழாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழிசை தங்கபாண்டியனையும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலுவையும் அழைத்து இருக்கோம். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என்பதெல்லாம் வெறும் கூச்சல். திரும்பவும் அடித்து சொல்கிறேன். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. அதனால் இது போன்ற கூச்சலுக்கெல்லாம் காது கொடுக்கத் தேவையில்லை. இப்பவே பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம் நம்முடையது என்று உரக்கப் பேசுவோம். என்னை பொறுத்தவரை அரசியலுக்கு வர எண்ணம் எனக்கு இல்லை என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full