'மெய்யழகன்' படத்தில் நடித்துள்ள சன் டிவி நடிகை - வைரலாகும் அவரின் நெகிழ்ச்சி வீடியோ

By Rajkumar · 2/10/2024

சீரியல் நடிகை ஸ்வாதி கொண்டே 'மெய்யழகன்' திரைப்படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்திருக்கும் தகவல்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களாக திகழும் அரவிந்த்சாமி-கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மெய்யழகன்'. இந்த படத்தை '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D நிறுவனம் தயாரித்திருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் சீரியல் நடிகை சுவாதி கொண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு சில நடிகைகள் சீரியலில் அறிமுகம் ஆகி திரைப்படங்களிலும் பெரிய அளவில் பிரபலமாவது உண்டு.

சுவாதி கொண்டே குறித்து:

அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஈரமான ரோஜாவே 2' சீரியல் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் சுவாதி கொண்டே. இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது என்று சொல்லலாம். ஈரமான ரோஜாவே சீரியல் நிறைவடைந்த பிறகு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'மூன்று முடிச்சு' சீரியலில் கதாநாயகியாக கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பி யில் டாப்பில் இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=T4xCRZePvWg

மெய்யழகன் குறித்து சுவாதி:

இந்நிலையில், 'மெய்யழகன்' திரைப்படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை குறித்து நடிகை சுவாதி கொண்டே பேசியிருக்கிறார். அதில் அவர், நானும் அரவிந்த்சாமியும் நடித்த காட்சிகளை திரையில் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் சிறு வயதிலிருந்தே அரவிந்த்சாமி சாரோட பெரிய ரசிகை. ஆனா, அவரை சூட்டிங் ஸ்பாட்டில் பக்கத்துல வைத்து பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவர் பயங்கர கலராக இருந்தார். அவருடைய கலரைப் பார்த்து நான் பிரமித்து போயிட்டேன்.

அரவிந்த்சாமி குறித்து:

இப்படி கூட யாராவது இருப்பாங்களா என்று கூட நினைத்திருக்கிறேன். அதற்குப் பிறகு அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. அவரை நான் கட்டிப்பிடிப்பது போன்ற காட்சிகள் எடுக்க வேண்டியது இருந்தது. ஆனால், என்னால் அவரை கட்டிப்பிடிக்க முடியவில்லை. நான் ரொம்பவே பதற்றத்தோடு இருந்தேன். அதைப் பார்த்து அரவிந்த்சாமி என்னிடம் ரொம்ப இயல்பாக பழகி பேசினார். எனக்கு நடிப்பதற்கான நிறைய டிப்ஸ்களையும் கொடுத்தார்.

பல வருடம் பந்தம் போலிருக்கிறது:

மேலும், அரவிந்த்சாமி சாருடன் நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சீரியலில் நடிக்கும் போது நம்முடன் நடிப்பவர்கள் நமக்கு ஒரு கம்ஃபர்ட் கொடுப்பது போல் தான், அரவிந்த்சாமி எனக்கு கொடுத்தார். அவரை இதுக்கு முன்னாடி நான் பார்த்தது கூட இல்லை. ஆனால், ஏதோ பல வருடம் பந்தம் இருப்பதைப் போல் அவர் என்னிடம் நடந்து கொண்டார். அவரை பார்க்கும் பொழுது எனக்குள் இருந்த ஆனந்தத்தை சொல்வதற்கு வார்த்தையே இல்லை என சுவாதி நெகிழ்ச்சியோடு கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full