மாஸ்டர் செஃப் குழுவின் மீது தமன்னா கேஸ் போட இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் புகழ் பெற்ற சமையல் நிகழ்ச்சி தான் மாஸ்டர் செஃப். இந்த நிகழ்ச்சி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அதே போல் தெலுங்கில் இந்த நிகழ்ச்சியை தமன்னா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

தெலுங்கில் இந்த நிகழ்ச்சியை தம்மனா நல்ல முறையில் தொகுத்து வழங்கி வந்தார். பின் திடீரென்று தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து தமன்னா நீக்கப்பட்டார். தற்போது மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை அனுசுயா தொகுத்து வழங்கி வருகிறார். தமன்னா மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார்? என்ற காரணம் தெரியாமல் இருந்தது.இந்நிலையில் தம்மனா வக்கீல் தரப்பு சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisement

அதில் அவர் கூறியிருப்பது, தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி பதிப்புக்கான சம்பள பாக்கி இன்னும் கொடுக்கப்படவில்லை. தயாரிப்பு தரப்பான இன்னவேடிவ் ஃபிலிம் அகாடமியின் தொழில் முறையற்ற அணுகுமுறையாலும் தமன்னா சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக தமன்னா தன்னுடைய மற்ற வேலைகளை ரத்து செய்துவிட்டு இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியை முடித்து தர வேண்டும் என்று கவனம் செலுத்தி இருந்தார்.

ஆனால், இந்த நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பிலிருந்து இவரை நீக்கி உள்ளார்கள். அதோடு தொடர்ந்து தயாரிப்பு தரப்பிலிருந்து சம்பளம் தரவில்லை. தொழில் ரீதியாகவும் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை. இதனால் தமன்னா மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தயாரிப்பு மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளார் என்று தமன்னா வக்கீல் கூறி இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement