நடிகை தமன்னாவிற்கு கூடிய விரைவில் திருமணம் ஆக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தம்மனா. தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி’ படத்தின் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகை தமன்னா. ஆனால், அதற்கு முன்பாகவே இவர் 2005 ஆம் ஆண்டு இந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.

அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் தான் நடிகை தமன்னாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றது.

Advertisement

தமன்னா திரைப்பயணம்:

கடைசியாக இவர் விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த ஆக்சன் என்ற படத்தில் தான் தமிழில் நடித்திருந்தார். சமீப காலமாகவே இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஹிந்தியில் தமன்னா நடித்திருந்த படம் பப்ளி பவுன்சர். இந்த படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார்.

தமன்னா நடிக்கும் படங்கள்:

இதனை எடுத்து தமன்னா அவர்கள் ஹிந்தியில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு இவர் சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இப்படி இவர் சினிமா உலகில் நுழைந்து 17 வருடங்களுக்கு மேல் ஆகிறது.

Advertisement

தமன்னா திருமணம்:

அப்படி இருந்தும் தமன்னா தன்னுடைய உடலை ஒல்லியாகவும், பிட்டாகவும் வைத்து இருக்கிறார். சமீப காலமாக இவர் அழகு குறித்தும், பிட்னஸ் குறித்தும் டிப்ஸ் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் தமன்னாவிற்கு திருமணம் நடைபெற இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதாவது, தமன்னா அவர்கள் மும்பையில் உள்ள தொழிலதிபர் ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம்.

Advertisement

தமன்னா திருமணம் செய்யும் நபர்:

கூடிய விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெற இருப்பதாகவும் உறுதியாகி இருக்கிறது. இதை தமன்னாவே விரைவில் சமூக வலைத்தளங்களில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தமன்னா திருமணம் செய்து கொள்ளும் நபர் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement