குடும்பத்துடன் படுக்கை அறை காட்சி பார்த்த தமன்னா- சர்ச்சைக்கு கொடுத்த அதிரடி பதில்-என்னன்னு நீங்களே பாருங்க!

By subhashini · 3/7/2023

படுக்கையறை காட்சிகளை குடும்பத்துடன் பார்த்தது குறித்த கேள்விக்கு தமன்னா அளித்து இருக்கும் அதிரடி பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி’ படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகை தமன்னா. ஆனால், அதற்கு முன்பாகவே இவர் 2005 ஆம் ஆண்டு இந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும், இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் தான் நடிகை தமன்னாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றது. சமீப காலமாகவே இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார்.

தமன்னா திரைப்பயணம்:

சமீபத்தில் ஹிந்தியில் தமன்னா நடித்திருந்த படம் பப்ளி பவுன்சர். இந்த படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். இதனை அடுத்து தமன்னா அவர்கள் ஹிந்தியில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு இவர் சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். தற்போது தமன்னா அவர்கள் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இவர் ஜீ கர்தா என்ற தொடரிலும் நடித்திருக்கிறார்.

லஸ்ட் ஸ்டோரீஸ் 2:

தற்போது தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். இதில் விஜய் வர்மா, கஜோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த வெப் தொடர் ஜுன் 29ந் தேதி ரிலீஸ் ஆகி இருக்கிறது. மேலும்,இந்த வெப் தொடரில் தமன்னா ரொம்ப கவர்ச்சியாகவும், படுகை காட்சிகளிலும், முத்த காட்சிகளிலும் நடித்திருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் சர்ச்சை கிளப்பி இருக்கிறது.

தமன்னா அளித்த பேட்டி:

இந்த படத்தில் ஓவர் கிளாமராக தமன்னா நடித்திருக்கிறார். இது குறித்து சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை எழுந்திருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக தமன்னா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, 2023ல் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறீர்கள்? என்னைப் பற்றி கேலி,விமர்சனம் செய்பவர்களை ட்விட்டர் மாகாக்கள். ஹீரோக்கள் வீண் பேச்சு ரொமான்ஸ் பேசினாலும் சூப்பர் ஸ்டார் ஆகி விடுகிறார்கள்.

படுக்கை அறை காட்சி குறித்து சொன்னது:

அதுவே, ஒரு பொண்ணு அப்படி நடித்தால் அவளுடைய கேரக்டரை மதிப்பிடுவார்கள். ஏன் என்று எனக்கு புரியவில்லை? இந்த மாதிரியான சர்ச்சைகளை எல்லாம் இப்போது யாரும் பார்ப்பதில்லை. ஆனால், இந்த படத்தில் படுக்கையறை காட்சிகளை குடும்பத்துடன் பார்க்கும்போது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. அதேபோல அந்த காட்சிகளை படமாக்கும் போது நான் படபடப்புடன் அசௌகரியமாக தான் உணர்ந்தேன். ஆனால், அதே நேரத்தில் ஒரு கலைஞனாக என்னுடைய வேலையை செய்தது நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full