கல்லூரியில் படிக்கும் போது பணத்துக்காக டாப்ஸீ செய்த வேலை..! என்ன வேலை தெரியுமா ..?

By Ajju · 1/7/2018
தமிழில் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி . ஆனால் ,2010 ஆம் ஆண்டே தெலுங்கில் வெளியான 'ஜும்மண்டி' நாடம் என்னும் படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த நடிகை டாப்ஸி, அதன் பின்னர் பல மொழி படங்களில் நடித்துவிட்டார். சினிமாவில் வருவதற்கு முன்பு தான் செய்த வேலை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் டாப்ஸி. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்'"டெல்லியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் தான் நான் படித்தேன். கல்லூரியில் படிக்கும் போது நான் தான் வகுப்பில் முதல் மதிப்பேன் பெரும் மாணவியாக இருந்தேன். அது போக நான் படிப்பில் பல பதக்கங்களையும் வென்றுள்ளேன். பின்னர் ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இருப்பினும் எனது ஆர்வம் முழுக்க நடிப்பில் தான் இருந்தது. அதற்கு என்னுடைய குடும்பத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் நான் மாடலிங் துறையில் ஈடுபட்டு பல மேடைகளில் குட்டையான ஆடை வலம் வந்துள்ளேன். நான் திரைப்பட வாய்ப்புகள் தேடி அலைந்த போது எனக்கு பணம் தேவைப்பட்டது. அதனால் தான் மாடலிங் துறையில் ஈடுபட்டு குட்டையான ஆடைகளை அணிந்து மேடைகளில் கேட் வால்க் செய்ய வேண்டியதாயிற்று. அதில் வந்த பணம் தான் நான் படவாய்ப்புகள் தேடும் போது எனக்கு செலவிற்கு உதவியாக இருந்தது. தற்போதும் நான் படங்களில் ஒரு கதாநாயகியாக நடித்தாலும் இன்றும் நான் ஒரு நடுத்தர பெண்ணின் மனப்பான்மையுடன் தான் இருக்கிறேன் " என்று கூறியுள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full