நீங்கள் தான் பெயர் தெரியாத கோழைகள் - நடிகை திரிஷாவின் காட்டம் - காரணம் இது தான்

By subhashini · 11/4/2025

சோசியல் மீடியாவில் வரும் சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்து நடிகை திரிஷா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா‌. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுமார் 22 ஆண்டுகளுக்கு மேலாக டாப் ஹீரோயினாக வலம் வரும் இவர் இன்றும் ஹீரோயினாக நாயகிகளுக்கு போட்டியாக விளங்குகிறார். அந்த வகையில் திரிஷா நடிப்பில் வெளியாகி இருந்த படம் விடாமுயற்சி.

திரிஷா திரைப்பயணம்:

அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் குட் பேட் அக்லி என்ற படத்தில் திரிஷா நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருக்கிறார். கடைசியாக இவர் இயக்கிய மார்க் ஆண்டனி படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது.

குட் பேட் அக்லி படம்:

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், நேற்று இந்த படத்தினுடைய முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்பட்டது. அஜித் ரசிகர்கள் தியேட்டரில் ஆடி பாடியும், பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடி இருக்கிறார்கள்.

திரிஷா நடிக்கும் படம்:

இதை அடுத்து திரிஷா இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் திரிஷாவின் திருமணம் குறித்து பலரும் கேள்வி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 40 வயதை கடந்தும் த்ரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்படி இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் தேவையில்லாத சர்ச்சைகளை பரப்பும் நபர்களை கண்டித்து நடிகை திரிஷா போட்டு இருக்கும் பதிவுதான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காக வருகிறது.

திரிஷா பதிவு:

அதில் அவர், சோசியல் மீடியாவில் உட்கார்ந்து கொண்டே மற்றவர்களை பற்றி முட்டாள்தனமாகவும் தேவையில்லாத வதந்திகளை பதிவிடும் டாக்ஸிக் மக்களே, நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்துகிறீர்கள்? நன்றாக தூங்குகிறீர்கள்? உண்மையில் நீங்கள் பெயர் தெரியாத கோழைகள். உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார் என்று பதிவிட்டிருக்கிறார். எதற்காக திரிஷா இப்படி கோபமாக திட்டி பதிவிட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full