'காதல் எப்போதும் வெற்றி' நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவால் குழம்பிய ரசிகர்கள் - என்ன தெரியுமா?

By subhashini · 29/3/2025

நடிகை திரிஷா பதிவிட்டு இருக்கும் லேட்டஸ்ட் போஸ்ட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா‌. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுமார் 22 ஆண்டுகளுக்கு மேலாக டாப் ஹீரோயினாக வலம் வரும் இவர் இன்றும் புதுமுக நாயகிகளுக்கு போட்டியாக விளங்குகிறார். கடைசியாக திரிஷா நடிப்பில் வெளியாகி இருந்த படம் விடாமுயற்சி. அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ வெளியாகி இருந்தது.

திரிஷா திரைப்பயணம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. அதை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி என்ற படத்திலும் திரிஷா நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். கடைசியாக இவர் இயக்கிய மார்க் ஆண்டனி படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. குட் பேட் அக்லி படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.

திரிஷா நடிக்கும் படம்:

இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதை அடுத்து திரிஷா இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் திரிஷாவின் திருமணம் குறித்து பலரும் கேள்வி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 40 வயதை கடந்தும் த்ரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

த்ரிஷா பதிவு:

அதிலும், திரிஷா- வருண் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் வரை சென்று சில காரணங்களால் நின்று போனது. இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் அவர், பச்சை நிற பட்டுப்புடவையில் தலையில் மல்லி பூ வைத்து ரொம்ப அழகாக இருக்கிறார். அந்த புகைப்படத்துடன் த்ரிஷா, லவ் ஆல்வேஸ் வின் என்று கேப்டன் போட்டிருக்கிறார்.

ரசிகர்கள் கேள்வி:

இதை பார்த்த ரசிகர்கள் பலருமே, உங்களுக்கு நிச்சயதார்த்தமா? திருமணம் செய்ய போகிறீர்களா? யாரையாவது காதலிக்கிறீர்களா? என்றும் இன்னொரு தரப்பினர் இது போட்டோ சூட்டுக்காக எடுக்கப்பட்ட புகைப்படமா? படத்தின் காட்சியா? என்று கேட்டு இருக்கிறார்கள். தற்போது திரிஷாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் தான் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் கவர்ந்து இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full