அசிங்கமான எண்ணம் கொண்டவர்கள் தான் இப்படி செய்வார்கள் - கோபத்தில் திரிஷா போட்ட பதிவு
தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிஷா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக டாப் ஹீரோயினாக வலம் வரும் இவர் இன்றும் ஹீரோயினாக நாயகிகளுக்கு போட்டியாக விளங்குகிறார். அந்த வகையில் திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த விடாமுயற்சி படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதை அடுத்து சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த குட் பேட் அக்லி என்ற படத்தில் திரிஷா நடித்து இருந்தார்.
திரிஷா திரைப்பயணம்:
இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருந்தார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் மேக்கர்ஸ் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூலை செய்தது. இதை அடுத்து தற்போது திரிஷா அவர்கள் கமல் நடிப்பில் வெளிவந்த தக் லைப் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது.
திரிஷா படங்கள்:
இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறவில்லை.இந்த படத்தின் மூலம் திரிஷாவிற்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் தான் வந்தது. இதை அடுத்து திரிஷா தெலுங்கில் விஸ்வம்பரா, தமிழில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு போன்ற படங்களில் எல்லாம் கமிட்டாகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் முன்னணி நடிகையாக திரிஷா திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
விஜய்-திரிஷா சர்ச்சை:
இவரை பற்றி பெரிதாக சர்ச்சைகளே இல்லை. ஆனால், சமீப காலமாக திரிஷா- விஜய் தொடர்பான விமர்சனங்கள் அதிகமாக சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக, விஜய் அரசியலுக்கு வந்த பிறகு தான் இருவரையும் சேர்த்து வைத்து மீம்ஸ்கள், வீடியோக்களை எல்லாம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. திரிஷா- விஜய் இருவருமே நல்ல நண்பர்கள். இவர்கள் இருவருமே சேர்ந்து பல படங்களில் நடித்தார்கள். இருந்தாலும் இருவருக்கும் இடையே நட்பு ரீதியாக நல்ல உறவு இருக்கிறது.
திரிஷா பதிலடி:
அந்த வகையில் விஜயின் பிறந்தநாளுக்கு எல்லாம் திரிஷா வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதை பார்த்து நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து மீம்ஸ்களை தெறிக்க விட்டிருந்தார்கள். இந்நிலையில் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிஷா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நாம் அன்பால் நிறைந்திருக்கும் சமயத்தில் அது அசிங்கமான எண்ணம் கொண்டவர்களை குழப்புகிறது என்று கூறியிருக்கிறார்.