நடிகை த்ரிஷாவுக்கு திருமணம்? மாப்பிள்ளை யார், எந்த ஊர்க்காரர் தெரியுமா? அதிருப்தியில் ரசிகர்கள்
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், 40 வயதை கடந்தும் திரையுலகில் வலம் வரும் கதாநாயகிகளில் இவரும் ஒருவர்.
சுமார் 22 ஆண்டுகளுக்கு மேலாக டாப் ஹீரோயினாக வலம் வரும் இவர் இன்றும் புதுமுக நாயகிகளுக்கு போட்டியாக விளங்குகிறார். இந்த ஆண்டு திரிஷா - அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை அடுத்து கடைசியாக சிம்பு- கமல் நடிப்பில் வெளியாகியிருந்த தக் லைப் படத்தில் திரிஷா நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கியிருந்தார்.
திரிஷா திரைப்பயணம்:
இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதை அடுத்து தற்போது திரிஷா அவர்கள் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் விஸ்வம்பரா என்ற படத்தில் நடிக்கிறார். அதுபோக இவர் தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து இவர் இன்னும் சில படங்களில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் திரிஷாவின் திருமணம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. தற்போது வரை திரிஷா பேச்சுலராக இருக்கிறார்.
திரிஷா திருமணம்:
திரிஷாவிற்கு சீக்கிரமாகவே திருமணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டிலேயே இவருக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று திரிஷாவுடைய பெற்றோர்கள் உறுதியாக இருக்கிறார்களாம். இவர்களுடைய கண்டிஷனுக்கு உட்பட்டு ஒரு வரனும் கிடைத்திருக்கிறது. மாப்பிள்ளையும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. திரிஷாவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை அவர்களுடைய குடும்ப நண்பர்தானாம்.
https://www.youtube.com/watch?v=qy9bYmOtouE
திரிஷா குறித்த தகவல்:
அவர் சண்டிகரை சேர்ந்த ஒரு தொழிலதிபர் என்று கூறப்படுகிறது. இரு தரப்பிலுமே திருமண பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதை திரிஷாவே கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக கூறுவார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஏற்கனவே திரிஷா- வருண் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் வரை சென்று சில காரணங்களால் நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது.