பெண்கள் கறவை மாடுனு நான் பாடவே மாட்டேன்னு சொன்னேன், அப்புறம் வேறு படத்தில் என்ன குறிப்பிட்டு அந்த பாட்ட எழுதினார் வாலி - ஊர்வசி ஷேரிங்.

By Arun · 30/1/2022

தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சனி. திரை உலகிற்காக ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார். இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தான் ஊர்வசி தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி நகைச்சுவையும் செய்யலாம் என்பதை நிரூபித்தார்.

https://www.youtube.com/watch?v=fAKQcJHS3RA&t=47s

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். இதனிடையே நடிகை ஊர்வசி அவர்கள் முதலில் மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயன் என்பவரை 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. பின் நடிகர் மனோஜ்–ஊர்வசிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரமாக 2008 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். பின்னர் நடிகர் மனோஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஊர்வசி குடும்பம் பற்றிய விவரம்:

மனோஜை பிரிந்ததற்கு முக்கிய காரணம், அவரது குடிப்பழக்கம் தான் காரணம் என்று ஊர்வசி கூறியிருந்தார். அதோடு தன் மகளையும் மனோஜ் தன்னுடன் வைத்துக் கொண்டார். பின் நடிகை ஊர்வசி அவர்கள் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் சிவபிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இருந்தாலும் இவர் தன்னுடைய கேரியரை விடாமல் தொடர்ந்து நடித்து கொண்டு வருகிறார். தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார்.

https://twitter.com/TamilDetails/status/1487060282845241352

மகளிர் மட்டும் படம்:

அதுமட்டும் இல்லாமல் படங்களில் தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஊர்வசி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று தான் மகளிர் மட்டும். இந்த படம் 1994 ஆம் ஆண்டு இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் வெளிவந்து இருந்தது. இந்த படத்தில் நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகிணி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை தெலுங்கு, மலையாள மொழியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=5vkRRYMlmuo

ஊர்வசி அளித்த பேட்டி:

இப்படி மிகப் பிரபலமான படத்தில் வெளிவந்த கறவை மாடு-3 என்ற பாடலை வாலி எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் ஊர்வசி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் மகளிர் மட்டும் படம் குறித்தும் ஊர்வசி பாடல் குறித்தும் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த படத்தில் காள மாடு ஒன்னு கறவை மாடு-3 என்ற பாடல் வரும். அந்த பாடலை கேட்டவுடன் எனக்கு கோபம் வந்தது. உடனே இதில் நடிக்க முடியாது என்று சொன்னேன். பின் எப்படி எங்களை மாடுகள் என்று சொல்வது? எல்லாம் பயங்கர சண்டை போட்டேன். அதற்குப் பிறகுதான் எல்லோரும் சமாதானப்படுத்தி அந்த பாடலில் நடிக்க வைத்தார்கள்.

காதலன் பட ஊர்வசி பாடல்:

அந்த பாடலை கவிஞர் வாலி அவர்கள் தான் எழுதி இருந்தார். பின் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த காதலன் படத்தில் 'ஊர்வசி ஊர்வசி' என்ற பாடல் வரும். நான் அந்த பாடலை முதன்முதலாக காரில் போகும்போது தான் கேட்டேன். அதை கவிஞர் வாலி அவர்கள் போட்டார். நீங்கள் என்னை வைத்து தானே எழுதினீர்கள் என்று கேட்டதற்கு ஆமாம், உன்னை வைத்துதான் இந்த பாடலை எழுதினேன் என்று சொல்லி இருந்தார் என்று ஊர்வசி கூறியிருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full