-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

சினிமாவில் என் அக்காவுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கல – வேதனையில் ஊர்வசி சொன்ன தகவல்

0
20

தன்னுடைய அக்கா குறித்து மனம் திறந்து நடிகை ஊர்வசி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. இவர் இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் மக்கள் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி நகைச்சுவையும் செய்யலாம் என்பதை நிரூபித்தவர் ஊர்வசி. மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது ஊர்வசி படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார்.

ஊர்வசி திரைப்பயணம்:

அந்த வகையில் சமீபத்தில் ஊர்வசி நடித்திருந்த அப்பத்தா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த படத்தில் அமித் பார்கவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இது ஊர்வசியின் 700 ஆவது படம். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை ஊர்வசி, என்னுடைய அக்கா கல்பனாவிற்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அதில் நான் தான் நடித்தேன். இருந்தும் அவருக்கு என் மீது கோபப்படவில்லை.

ஊர்வசி குறித்து சொன்னது:

-விளம்பரம்-

என்னுடைய வளர்ச்சியை பார்த்து அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். அதோடு மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் என்னுடைய அக்காவிற்கு சரியான மரியாதையை கொடுக்கவில்லை. அக்கா என்னை விட திறமைசாலி. அவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். காரணம், அக்காவுடன் நான் சென்று விட்டால் எனக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுவார்கள். இதனால் தான் நான் பட விழாக்களில் கலந்து கொள்ளாமலே இருந்தேன்.

-விளம்பரம்-

ஊர்வசி சகோதிரிகள் குறித்த தகவல்:

அவருடைய மறைவிற்கு பின் பல விருதுகள் கொடுத்தார்கள். நான் அதை வாங்கவில்லை என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருந்தார். நடிகை ஊர்வசிக்கு கல்பனா, கலரஞ்சனி என இரண்டு சகோதரிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவருமே சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர்கள். அதில் கல்பனா தமிழ், மலையாளம் மொழியில் பல படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும், இவரால் முன்னணி நடிகையாக இடம் பிடிக்கவில்லை.

ஊர்வசி திரைப்பயணம்:

இவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். மேலும், புகழின் உச்சத்தில் இருந்த ஊர்வசி சொந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்திருந்தார். நடிகை ஊர்வசி அவர்கள் முதலில் மலையாள நடிகர் மனோஜ் என்பவரை திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும்(குஞ்சட்டா) இருக்கிறது. எட்டு வருடங்கள் தான் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பின் ஊர்வசி அவர்கள் சிவபிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news