ஹிந்தி திரையுலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் ஊர்வசி ரவுத்தேலா. இவர் 2013-ஆம் ஆண்டு வெளி வந்த ‘சிங் ஷாப் தி கிரேட்’ என்ற படத்தில் பாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு ஜோடியாக நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். இது தான் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஹீரோயினாக அறிமுகமான முதல் ஹிந்தி திரைப்படம். இதனைத் தொடர்ந்து இவர் கன்னட திரையுலகில் என்ட்ரியானார். பின் இவர் அதிகம் பாலிவுட் படங்களில் தான் கவனம் செலுத்தி வந்தார். ‘சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4’ ஆகிய பல படங்களில் படங்களில் ஊர்வசி ரவுத்தேலா நடித்தார். இதுமட்டுமின்றி ‘பாரோபைசின்’ என்ற பெங்காலி படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. தற்போது இவர் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடிக்கும் தி லெஜன்ட் என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக்கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அருள். இவர் பேஸ்டு பேஸ்டு பேஸ்டு என்று அணைத்து தொலைக்காட்சிகளிலும் தனது பேஸ்டு விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்னேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளார். இவரை நெட்டிசன்கள் விமர்சித்து இருந்தாலும் அசராமல் ஹன்சிகா, தமன்னா என்று பல நடிகைகளுடன் நடனமாடி இருந்தார். விளம்பரத்தில் கலக்கிய நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சினிமாவிலும் நுழைய இருக்கிறார்.

Advertisement

இவர் நடிக்க உள்ள படத்தை பிரபல சீரியலை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் ஜேடி- ஜெர்ரி தான் இயக்குகின்றனர். அதோடு இவரின் கடை விளம்பரத்தையும் இவர்கள் தான் இயக்கி இருந்தார்கள். மேலும், சரவணன் அருள் நடிக்கும் படத்திற்கு தி லெஜன்ட் என்று தலைப்பிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்துள்ளார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல சரளா, நடிகர்கள் நடித்துள்ளனர்.

தி லெஜன்ட் படம் பற்றிய தகவல்:

மேலும், படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த படத்தின் படபிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, இமயமலை மற்றும் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடத்தி முடித்து உள்ளது. மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக ஊர்வசி ரவுத்தேலா நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் உக்ரைனில் நடக்க இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உலகையே உலுக்கி கொண்டிருக்கும் சம்பவம் உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை.

Advertisement

உக்ரைனில் நடக்க இருந்த படப்பிடிப்பு:

இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் கலவரத்தால் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்படும் உயிரிழந்து வருகின்றனர். இதனால் பிற நாடுகளும் போரை நிறுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பிற்கு சென்ற பல இந்திய மக்களும் பயத்தின் காரணமாக திரும்பி வந்திருக்கிறார்கள். தற்போது இந்த போர் சர்வதேச அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் தாக்குதல் குறித்தும் இந்தியா திரும்பியது குறித்தும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கி இருப்பதாக ரஷ்ய அறிவித்த இரண்டு நாட்களுக்கு முன்பே பிப்ரவரி 21 ஆம் தேதி அன்று நாடு திரும்பி விட்டோம். உக்ரைனின் கீவ் மற்றும் ஒடேசா பகுதிகளில் தி லெஜண்ட் படத்தின் படப்பிடிப்பு நடக்க இருந்தது.

Advertisement

உக்ரைனில் ஏற்பட்ட அனுபவம்:

இந்த நிலையில் போர் பதட்டம் காரணமாக படக்குழு இந்தியாவுக்கு திரும்ப வேண்டியதாகி விட்டது. நாங்கள் படப்பிடிப்பில் இருக்கும்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் இருந்தது. ஆனால், நாங்கள் இன்று என்ன என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு திட்டமிட்டோம். நான் உக்ரைனில் தரையிறங்கியபோது என் சகோதரன் பயப்பட தொடங்கிவிட்டார். என் அப்பாவும் வேறு வேலையாக அங்கு வந்திருந்தார். பயத்தையும் மீறி என்அப்பா இருந்ததால் சிறிது பாதுகாப்பாக நான் உணர்ந்தேன். அங்கு பிரதமரை சந்திப்பதாக இருந்தோம்.

உக்ரைனால் தனக்கு நேர்ந்தது:

ஆனால், நடந்துகொண்டிருந்த பிரச்சனைகளால் அவரை சந்திக்க முடியவில்லை. உக்ரேனிய இசைக்கலைஞர் மோனடிக் (Monatik) உடன் மியூசிக் கொலாப்ரசன் செய்வதாக இருந்தது. கூடிய விரைவில் அங்கு நிலைமை சீரடையும் வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். நான் மிகவும் பயந்து இருக்கிறேன். என்னுடைய நண்பர்களும் உறவினர்களும் அங்கு இருக்கிறார்கள். அவர்கள் குறித்து அடிக்கடி விசாரித்துக் கொண்டு இருக்கிறேன். போரில் இழப்பதற்கு எந்த தாயும் பிள்ளைகளை பெற்று எடுப்பதில்லை. போர் எதற்கும் விடையாகாது. இந்தப் போரினால் எந்த பயனும் இல்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement